வெலிமடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நுகதலாவ பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (11) இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக வெலிமடை பொலிஸார் தெரிவித்தனர்.

வெலிமடையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்று மற்றுமொரு வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது  இருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிமடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here