தமிழக அரசாங்கம் அறிவித்துள்ள மீன்பிடித் தடை காலத்தில் மீனவர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இருநாட்டு அரசாங்கங்களையும் வலியுறுத்துவதற்கு இந்திய மீனவர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகபேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பகுதியில் நேற்று இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தமிழகத்தின் கிழக்கு கடற்பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜூன் மாதம் 14 ஆம் திகதி வரையில் 61 நாட்களுக்கு இந்த மீன்பிடித் தடைக்காலம் அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








