ஹாலிஎல – அட்டாம்பிட்டிய வீதியில் பயணித்துக்கொண்டிருந்த நபர் ஒருவரை சோதனைக்குட்படுத்தியபோது அவரிடம் இருந்து 5500 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக  ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.

ஹாலிஎல பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைய நேற்று புதன்கிழமை (16/4/2025) இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹாலிஎல, துனுவங்கிய, சமகிபுர பகுதியில் வசிக்கும் இந்த சந்தேக நபரை இன்று வியாழக்கிழமை (4/17/2025) பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here