இந்த வருடம் இலங்கை பொலிஸ் சேவையில் 5,000 அதிகாரிகளை பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகளிடையே நேற்று திங்கட்கிழமை (21) இடம்பெற்ற இணையவழி கலந்துரையாடலின் போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

2,000 அதிகாரிகளை விரைவில் பணியமர்த்த திட்டமிடப்பட்டுள்ளதுடன் மீதமுள்ள 3,000 பேர் டிசம்பர் மாதத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.

இதற்கு மேலதிகமாக, திறன் மேம்பாட்டுத் திட்டங்களை ஒழுங்கமைக்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பொலிஸ் அதிகாரிகளின் சேவையை திறமையாகவும், திறம்படவும் பெற்றுக் கொள்ள எதிர்ப்பார்க்கிறோம்.

இலங்கை பொலிஸ் சேவைக்கு தனி சம்பள அமைப்பை தயாரிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here