இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 11 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 205 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
பெங்களூரு அணிசார்பில் விராட்கோலி அதிகபட்சமாக 70 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
தொடர்ந்து 206 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 194 ஓட்டங்களைப் பெற்று போட்டியில் தோல்வியைத் தழுவியது.
அணி சார்பில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிகபட்சமாக 49 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
ஆட்டநாயகனாக ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சார்பாக 33 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஹசல்வுட் தெரிவு செய்யப்பட்டார்.








