பஹல்கம் தாக்குதலை தொடர்ந்து உலக நாடுகள் பலவும் இந்தியாவுக்கு ஆதரவாக பாகிஸ்தானுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

உலகையே உலுக்கிய இந்த தீவிரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக  இந்திய மத்திய அரசு குற்றம்சாட்டி வருகிறது.

இந்நிலையில்  அமெரிக்க தேசிய புலனாய்வுத்துறை  பணிப்பாளரான காஷ் படேலும் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களுக்கு அமெரிக்க தேசிய புலனாய்வுத்துறை இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு தேவையான அனைத்து உதவியையும் வழங்க தயாராக இருப்பதாகவும், மேலும் பாகிஸ்தானுக்கு இந்தியா கொடுத்த பதிலடிக்கு பாராட்டு தெரிவிப்பதாகவும் எக்ஸ் தளத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here