கடந்த காலத்தில் எம் மக்கள் செய்த தவறை இந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலிலும் சிங்கள கட்சிகளுக்கு வாக்களித்து எமது தமிழ் தேசிய இருப்பை அழித்துவிடாது இந்த தேர்தலில் ஐந்து கட்சிகள் கூட்டாக இணைந்து போட்டியிடுகின்ற ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினரின் கரங்களை பலப்படுத்தவேண்டும் என முன்னால் மாகாணசபை உறுப்பினர் பா. கஜதீபன் குறிப்பிட்டுள்ளார்.

எமது பிரதேசத்தை நாமே ஆளுகின்ற அதிகாரத்தை உருவாக்க வேண்டும். ஏன் என்றால் சிங்கள பிரதேசத்தில் ஒரு தமிழ் கட்சி தலைமையில் சிங்கள மக்களை வேட்பாளராக நிறுத்தினாலும் அம்மக்கள் அவர்களுக்கு வாக்களிக்கமாட்டார்கள். அவர்கள் தமிழ் தலைமையின் கீழ் தாம் இருப்பதை விரும்ப மாட்டார்கள். ஆனால் நம் மக்கள் சிங்கள கட்சிகள் சார்பானவர்களை கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெறவைத்தனர். ஆனால் அவர்களால் சுயமாக எமது உரிமைகள் தொடர்பில் பேசமுடியாது.

அதே போல இந்த உள்ளுராட்சி தேர்தலில் அதே தவறை நாம் செய்யாது எமது உரிமையை நாம் பாதுகாக்கவேண்டும் என்று உள்ளுராட்சி தேர்தலில் சாவகச்சேரி நகரசபை நுணாவில் மேற்கு வட்டார வேட்பாளர் முத்துலிங்கம் கோகுலறாஜை ஆதரித்து நேற்று மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சித்தார்த்தன் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

[யாழ் நிருபர்விஜய்குமார் லோஜன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here