நாடு முழுவதிலும் தென்மேல் பருவப் பெயர்ச்சிக்குரிய காலநிலை படிப்படியாக ஆரம்பிக்கின்றது என சிரேஸ்ட வானிலை மொஹமட் சாலிஹீன் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மத்திய ,சப்ரகமுவ, மேல், வடமேல், மற்றும் தென் மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.

கிழக்கு மாகாணத்தில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here