
ஐ.பி.எல். ரி-20 லீக் தொடரின் முதலாவது தகுதி காண் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ரோயல் சலன்சர்ஸ் பெங்களுர் அணி 5 ஓட்டங்களால் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
மகராஜா யாதவிந்திர முல்லன்பூர் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி, 14.1 ஓவர்கள் நிறைவில் 10 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 101 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, மார்கஸ் ஸ்டோய்னிஸ் வெறுமனே 17 பந்து வீச்சுகளுக்கு முகம்கொடுத்து 2 ஆறு ஒட்டங்கள் 2 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 26 ஓட்டங்களை பெற்று அபாரம் காட்டியிருந்தார்.
மேலும் பிரப்சிம்ரன் சிங் 10 பந்துகளுக்கு முகம் கொடுத்து 1 ஆறு ஓட்டங்கள் 2 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக மொத்தம் 18 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
அதேபோல அணி சார்பில் அஸ்மதுல்லா 18 ஓட்டங்களையும் நேகால் வதேரா 8 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
ரோயல் பெங்களூர் அணியின் பந்துவீச்சில், யாஸ் டயல் 4 ஓவர்கள் மாத்திரம் பந்து வீசி 26 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டினை கைப்பற்றியுருந்தார்.
அத்துடன் ஜோஸ் ஹேசல்வுட் 3.1 ஓவர்கள் பந்து வீசி 3 விக்கட்டினை கைப்பற்றியிருந்தார்.
இதனை தொடர்ந்து 101 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ரோயல் சலன்சர்ஸ் பெங்களூர் அணி 10 ஓவர்கள் நிறைவில் 2 விக்கட்டுக்களை இழந்து 106 ஓட்டங்களை பெற்று அபார வெற்றியடைந்தது.
ரோயல் சலன்சர்ஸ் பெங்களூர் அணி சார்பில் பிலிப் சோல்ட் 27 பந்துவீச்சுகளுக்கு முகம் கொடுத்து 3 ஆறு ஒட்டங்கள் 6 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 56 ஓட்டங்களை பெற்றுகொடுத்தார்.
மேலும் விராட் கோலி, மயங் அகர்வால், மற்றும் ரயத் படிதார் ஆகியோர் முறையே 12, 19, 15 ஓட்டங்களை பெற்றுகொடுத்தனர்.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்துவீச்சில் கைல் ஜாமிசன் 3 ஓவர்கள் பந்துவீசி 27 ஓட்டங்களை கொடுத்து 1 விக்கட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.
மேலும் முசீர் ஹான் 2 cபந்துவீசி 27 ஓட்டங்களை கொடுத்து 1 விக்கட்டுக்களையும் கைப்பற்றியிருந்தார்.







