ஐ.பி.எல். ரி-20 லீக் தொடரின் வெளியேற்றுதல் சுற்று போட்டியில்  குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ளது.

பஞ்சாப் மாநிலம் மஹாரஜா யாதவிந்திரா முல்லாப்பூர் மைதானத்தில் இன்றிரவு உள்ளூர் நேரப்படி 7.30 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதுவரை நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் குஜராத் டைட்டன்ஸ் அணி 14 போட்டிகளில் விளையாடி 9 வெற்றி, 5 தோல்விகளுடன் 18 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி 14 போட்டிகளில் விளையாடி 8 வெற்றி, 6 தோல்விகளுடன் 16 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 4 -வது இடத்தில் உள்ளது.

இரு அணிகளும் இன்று வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் மோதவுள்ள நிலையில் வெற்றி பெறும் அணி முதலாவது தகுதி சுற்றில் தோற்ற பஞ்சாப் அணியுடன் மோதும். இந்த போட்டியில் தோல்வியடையும் அணி போட்டியிலிருந்து வெளியேறும்.

இரு அணிகளுமே ஒன்றுக்கு ஒன்று சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here