நாள்பட்ட நோய்கள் உள்ளவர்களுக்கு சிக்குன்குன்யா கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்பதால், கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதார அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

45 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், குறிப்பாக நாள்பட்ட மூட்டுவலி, நீரிழிவு மற்றும் நுரையீரல் பிரச்சினைகள் உள்ளவர்கள் மற்றும் குழந்தைகள் தொற்றுநோய்க்கான அதிக ஆபத்தில் உள்ளதாக பேராசிரியர் அர்ஜுனா டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

சுகாதார கண்காணிப்பு செயன்முறையின் கீழ் 27 நோய்கள் கண்காணிக்கப்படுவதாகவும், வாராந்திர கண்காணிப்புடன் இந்த போக்கு குறைந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சரியான வழிகாட்டுதலின் கீழ், தேவைப்படுகையில் இரண்டு பெரசிட்டமோல் மாத்திரைகளை மாத்திரம் எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here