அம்பாறை மாவட்டம் கல்முனை, பெரியநீலாவணையில் வெட்டுக்காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
37 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பெரியநீலாவணை காவல்துறையினர் தெரிவித்தனர்.
இன்று (30) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கழுத்து மற்றும் தலை உள்ளிட்ட பகுதியில் பல வெட்டுக்காயங்கள் காணப்படுவதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மரணமடைந்த பெண்ணின் கணவர் மத்திய கிழக்கு நாடொன்றில் பணிபுரிபவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அம்பாறை தடயவியல் காவல்துறையினர் உட்பட பெரிய நீலாவணை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







