சீரற்ற காலநிலை காரணமாக நேற்று முன்தினம் இரவு 8 மணி முதல் இன்று காலை 8 மணி வரையான காலப்பகுதியில் மின்தடை தொடர்பான 55,940 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அவற்றில் 17,460 முறைப்பாடுகள் தீர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்துள்ளார்.
ஏனைய பகுதிகளில் 24 மணித்தியாலங்களுக்குள் மின் விநியோகத்தை வழமைக்குக் கொண்டு வர முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், மின்தடை தொடர்பான தகவல்களை 1987 என்ற துரித இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி அறிவிக்குமாறும் இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்துள்ளார்.








