தமிழ் சினிமா திரையுலகில் முண்ணனி நடிகராக திகழ்ந்து வருகிறார் விஜய் சேதுபதி, கடந்த ஆண்டில் இவர் நடித்து வெளியான இரண்டு திரைப்படங்களான மகாராஜா மற்றும் விடுதலை 2 மிகப்பெரிய வெற்றியடைந்தன.

தற்போது, பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான தலைவன் தலைவி திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் இணைந்து நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் பாடல் வெளியாகி, ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
அதே சமயம், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, அனல் அரசு இயக்கத்தில் பீனிக்ஸ் என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படம் ஜூலை 4ஆம் திகதியாகிய இன்று வெளியாகியுள்ளது.
பீனிக்ஸ் பட விழாக்களில் பேசிய போது, சில சமூக ஊடகங்களில் சூர்யா சேதுபதியை விமர்சிக்கும் வீடியோக்கள் வெளியானது. அந்த வீடியோக்களை வெளியிட்ட சிலர் சூரியா தரப்பினரால் அழைக்கப்பட்டதாகவும், பதிவுகளை நீக்குமாறு மிரட்டப்பட்டதாகவும் புகார் எழுந்தது.
இது தொடர்பாக, விஜய் சேதுபதியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது. அதற்கு, ”தம்பிகள் தெரியாமல் பண்ணிருப்பாங்க. எங்கள் தரப்பில் இருந்து யாருக்கேனும் அழைப்பு வந்து மிரட்டல் நடந்திருந்தால், அதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.








