இன்றையதினம் யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இராசா வின் தோட்டம், முலவை பகுதியைச் சேர்ந்த அழகரத்தினம் கிஸ்ரிபால்ராஜ் (வயது 48) என்பவரது சடலமே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபரின் சடலம் முலவை சந்திப் பகுதியில் கட்டடத்தில் அமர்ந்திருந்தவாறு பின் பக்கமாக விழுந்து உயிரிழந்து காணப்படுகிறது. இது இயற்கை மரணமா அல்லது செயற்கை மரணமா என இதுவரை தெரியவில்லை.

இது குறித்து யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 (யாழ் நிருபர்- கஜிந்தன்)

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here