A9 வீதியின் மிஹிந்தலை, பலுகஸ்வெவ பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து, கதிர்காமத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்துடன் அதன் பின்னால் சென்ற லொறி ஒன்று மோதியதனால் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் பேருந்தில் பயணித்த மூன்று பேர் காயமடைந்த நிலையில் மிஹிந்தலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது சம்பவத்துடன் தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு முன்னெடுத்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here