மேம்பட்ட செயற்கை நுண்ணறிவுப் பணிகளை இடைநிறுத்தம் செய்யுமாறு ஏ.ஐ ஆய்வு நிறுவனமான ஆந்த்ரோபிக் வலியுறுத்தியுள்ளதோடு, இதனால் மனிதக் கட்டுப்பாடு இழக்கப்படும் எனவும் எச்சரிக்கிறது.

நன்கு வளர்ச்சியடைந்த செயற்கை நுண்ணறிவு அமைப்புகளின் வளர்ச்சியைத் தற்காலிகமாக மெதுவாக்கவோ அல்லது இடைநிறுத்தவோ கூடிய ஒரு ஒருங்கிணைந்த வழிமுறைக்கு உடன்படுமாறு முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களை ஆந்த்ரோபிக் கேட்டு கொண்டுள்ளது.

இத்துறையில் ஏற்படும் விரைவான முன்னேற்றம் மனிதக் கட்டுப்பாட்டை இழக்க வழிவகுக்கும் என்றும் அது எச்சரித்துள்ளது.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட ஒரு பதிவில், கலௌட் செட்பொட்டை உருவாக்கிய நிறுவனமான ஆந்த்ரோபிக் , அதிநவீன செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் சிக்கலான பணிகளை அதிவேகத்தில் செய்யும் திறனைப் பெற்று வருகிறது,

அதன் மேலதிக வளர்ச்சியை “மெதுவாக்கவோ அல்லது தற்காலிகமாக இடைநிறுத்தவோ” உலகிற்கு ஒரு வாய்ப்பு இருப்பது நல்லது என்று கூறியுள்ளது.

ஆந்த்ரோபிக் ஏனைய நிறுவனங்களுடன் இணைந்து இந்த விடயத்தை ஆராய்ந்து, வேகத்தைக் குறைக்கவோ அல்லது இடைநிறுத்தவோ கூடிய வழிமுறைகளை உருவாக்க நடவடிக்கைகளை எடுக்கும் என்று கூறியுள்ளது.

இதுநேரம்,சக போட்டியாளரான ஓபன்ஏஐ (OpenAI) நிறுவனம் ஒரு தனி அறிக்கையில், செயற்கை நுண்ணறிவு மென்பொருட்களை செயற்படுத்துவதில் தனியார் நிறுவனங்கள் மாத்திரமே தனியாகச் செயல்படுவதை விட, அரசாங்கங்களிடமே பொறுப்பு இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

“தனியார் நிறுவனங்கள் மாத்திரம்செயல்படாது, ஜனநாயக அரசாங்கங்களே இறுதியில் விதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பொறுப்புக்கூறல் வழிமுறைகளைத் தீர்மானிக்க வேண்டும்,” என்று OpenAI கூறியதுடன், எந்தவொரு தனி நிறுவனமோ அல்லது ஆய்வகமோ புத்தாக்கத்தின் வேகத்தைத் தீர்மானிக்கக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதேநேரம் ஏ.ஐ மென்பொருட்கள் பணிகளைத் தன்னிச்சையாகச் செய்யும் திறனில் வேகமாக முன்னேறி வரும் நிலையில் எதிர்கால அமைப்புகள் தங்களின் மேம்படுத்தப்பட்ட பதிப்புகளை வடிவமைத்து உருவாக்கக்கூடும் என்றும், இந்த செயல்முறை “மீள்சுழற்சி சுய-மேம்பாடு” (recursive self-improvement) என்று அழைக்கப்படுவதாகவும் ஆந்த்ரோபிக் எச்சரித்தது.

இத்தகைய முன்னேற்றங்கள் அறிவியல் மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளில் பெரும் நன்மைகளைக் கொண்டுவரக்கூடும் என்றாலும் குறித்த அமைப்புகளின் மீதான கட்டுப்பாட்டை மனிதர்கள் இழக்கும் அபாயத்தையும் அவை அதிகரிக்கக்கூடும் என்றும் எச்சரித்துள்ளாத.

.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here