Sunday, June 28, 2026
No menu items!

K Dilakshan

இன்றுடன் நிறைவுக்கு வந்த சிவனொளிபாத மலை யாத்திரை காலம்..!

சிவனொளிபாத மலை யாத்திரை பருவகாலம் வெசாக் பௌர்ணமி தினமான இன்றுடன் முடிவடைகிறது. அதன்படி, இன்று காலை சிவனொளிபாத மலையிலிருந்து சிலையை உள்ளிட்டவற்றை எடுத்து செல்லும் ஊர்வலம் சிவனொளிபாத மலை அடிவாரத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாவட்ட பௌத்த விவகார ஒருங்கிணைப்பு அதிகாரி வணக்கத்திற்குரிய மொரஹேல சுகதஜோதி தேரர் தெரிவித்துள்ளார். சிவனொளிபாத மலை யாத்திரை காலம் கடந்த டிசம்பர் மாதம் 14...

கொத்மலை விபத்தில் சிக்கியவர்களில் 44பேர் தொடர்ந்து சிகிச்சையில்..!

கொத்மலை - கெரண்டி எல்ல பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்த 44 பேரும் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர். கொத்மலை பிரதேச வைத்தியசாலை, நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை, பேராதனை, கம்பளை மற்றும் நாவலப்பிட்டி ஆகிய வைத்தியசாலைகளில்...

கொத்மலை பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சென்று பார்வையிட்ட பிரதமர்..!

நுவரெலியா – கொத்மலை கெரண்டி எல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களை 11.05.2025.ஞாயிற்றுக்கிழமை இரவு பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய கம்பளை வைத்தியசாலைக்கு நேரில் சென்று பார்வையிட்டார். வைத்தியசாலைக்குச் சென்ற பிரதமர் காயமடைந்தவர்களின் நலன் விசாரித்ததோடு வைத்தியசாலையில் செயலாளர்களுக்கு வழங்கப்படுகின்ற சிகிச்சைகள் மற்றும் வசதிகள் குறித்தும் ஆராய்ந்தார். பிரதமருடன் அமைச்சர் பிமல் ராமநாயக்கவும் சென்றிருந்தார். சம்பவம் தொடர்பாக...

புலம்பெயர்ந்தோருக்கான விசா கொள்கைகளை கடுமையாக்கும் பிரித்தானியா அரசாங்கம்..!

புலம்பெயர்ந்தோருக்கான விசா கொள்கைகளை கடுமையாக்க பிரித்தானியா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வேலை விசாக்களின் கீழ் பிரிட்டனுக்கு வருபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நோக்கில் பிரித்தானியா அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொடர்புடைய புதிய கொள்கைகளை உள்ளடக்கிய குடிவரவு வெள்ளை அறிக்கை, இன்று (12) அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. திறமையான தொழிலாளர்களுக்கு விசா...

இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தம் தொடர்பில் அறிக்கை வெளியிட்ட ஜனாதிபதி..!

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தை இலங்கை அரசாங்கமும் மக்களும் வரவேற்றுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லையில் மீண்டும் மோதல்கள் வெடித்துள்ளன. பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரைத் தாக்கியதாக...

விசாக பூரணை தினத்தை முன்னிட்டு கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு..!

விசாக பூரணை தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் 388 கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் பேச்சாளருமான காமினி பீ திசாநாயக்க தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 34வது பிரிவின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, குறித்த கைதிகள் விசேட பொது மன்னிப்பில் விடுக்கப்படவுள்ளனர். அபராதம் செலுத்தாததால் சிறைத்தண்டனை அனுபவிக்கும் கைதிகள், சிறு குற்றங்களுக்காக சிறைத்தண்டனையில் பாதி...

திபெத் நாட்டில் சக்தி வாய்ந்த நில அதிர்வு..!

திபெத் நாட்டில் 5.7 மெக்னிடியூட் அளவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு ஒன்று பதிவாகியுள்ளது. இன்று அதிகாலை 2.41 அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூமிக்கு 10 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த நில அதிர்வில் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகின்றது.

ரம்பொட – கெரண்டி எல்ல விபத்து சாரதியின் கவனயீனமா?

ரம்பொட – கெரண்டி எல்ல பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் கவனயீனமா அல்லது தொழில்நுட்பக் கோளாறா என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். பேருந்து பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பெண்கள் உட்பட 21...

வெசாக் பௌர்ணமி தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி..!

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வாழ்த்து தெரிவித்துள்ளார். புத்த பெருமானின் பிறப்பு, ஞானம் மற்றும் பரிநிர்வாணம் ஆகியவற்றை நினைவுகூரும் வெசாக் பௌர்ணமி தினம், உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாகும் என அவரது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது, புத்த பெருமான், தர்மங்கள் அனைத்தையும் நிறைவேற்றி,...

ஒரு தாயின் தியாகம் – தன் உயிரை கொடுத்து தன் குழந்தையைக் காப்பாற்றினாள்..!

கொத்மலையில் கவிழ்ந்த பேருந்தின் உள்ளே சிக்கியிருந்த தனது குழந்தையைப் பாதுகாக்கும் வீடியோவில் காணப்பட்ட தாய் உயிரிழந்ததாக நியூஸ்ஃபஸ்ட் தெரிவித்துள்ளது. 45 வயதுடைய அந்தப் பெண்ணின் இறுதித் தருணங்கள், இடிபாடுகளுக்கு மத்தியில் தனது 9 மாதக் குழந்தையைப் பிடித்துக் கொண்டு, மனதை உருக்கும் காட்சியாகப் பதிவு செய்யப்பட்டன. பேரழிவு இருந்தபோதிலும், குழந்தை மீட்கப்பட்டு தற்போது நுவரெலியா மருத்துவமனையில்...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

 கூரிய ஆயுத தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு; சந்தேகநபர் கைது

வீரகெட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிஞ்சிகுனே பகுதியில் நேற்று இரவு, (27) கூரிய ஆயுத தாக்குதலினால் 30 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். ஹக்குருவெல...
- Advertisement -spot_img