Friday, July 3, 2026
No menu items!

K Dilakshan

களுத்துறை – ஹொரணை வீதியில் விபத்து; ஒருவர் பலி…!

களுத்துறை - ஹொரணை வீதியில் இடம்பெற்ற வேன் விபத்தில் தந்தை உயிரிழந்துள்ளதுடன் தாய் மற்றும் மகன் காயமடைந்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொக்குனுவிட்ட , வெலிக்கடை பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதுடைய தந்தையே உயிரிழந்துள்ளார். திருமண நிகழ்வொன்றுக்குச் செல்வதற்காக களுத்துறையிலிருந்து ஹொரணை நோக்கிப் பயணித்த வேன் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி...

ஐந்து கோடிக்கும் அதிக மதிப்புடைய கஞ்சாவுடன் ஒருவர் கைது…!

புத்தளம் பகுதியில் 203 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.    பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட  சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.    கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சாவின் மதிப்பு  ஐந்து கோடிக்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

பொதுச்சொத்து துஸ்பிரயோகம் தொடர்பில் அதிகரிக்கும் முறைப்பாடுகள்…!

பொதுச்சொத்துக்கள் துஸ்பிரயோகம் செய்யப்படுவது குறித்து அதிகளவில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக டிரான்பரன்சி இன்டநஷனல் ஸ்ரீலங்கா தெரிவித்துள்ளது. செப்டம்பர் 11 ம் திகதி வரை பொதுச்சொத்து துஸ்பிரயோகம் தொடர்பில் 758 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. பொதுகட்டிடங்களை தேர்தல் நோக்கங்களிற்காக பயன்படுத்துவது குறித்து அதிகளவில்-343 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன,பொதுமைதானங்கள், அரசஅலுவலகங்கள்,பாடசாலைகள் போன்றவற்றை தேர்தல் பிரச்சாரங்களிற்காக பயன்படுத்துகின்றனர் என அந்த அமைப்பு...

அமெரிக்க தேர்தல் குறித்து  கருத்து தெரிவித்த போப் பிரான்சிஸ்…!

கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் இந்தோனேஷியா, தைமூர், நியூகினியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த போப் பிரான்சிஸ் ரோம் திரும்பும் விமானத்தில் வைத்து செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். நடைபெறவிருக்கும் அமெரிக்க தேர்தல் குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வியெழுப்பினர். அதற்கு அவர் பதிலளிக்கையில், “ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசுக் கட்சி...

தேசிய மக்கள் கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது தாக்குதல்…!

மொனராகலை பிரதேசத்தில் இடம்பெற்ற தேசிய மக்கள் கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பியவர்கள் மீது சிலரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் மொனராகலை உள்ளூராட்சி மன்ற மைதானத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பஸ்ஸில் திரும்பிக் கொண்டிருந்த கட்சி ஆதரவாளர்கள் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் நால்வர் காயமடைந்துள்ளதுடன், அவர்கள்...

தலைமறைவாகியிருந்த அழகு கலை நிலையம் ஒன்றின் பணிப்பெண்ணிற்கு விளக்கமறியல்….!  

பெண்ணின் தலை முடி உதிர்ந்து விழும் அளவுக்கு கிரீம் வகைகளைப் பூசி பொலிஸாரிடமிருந்து தலைமறைவாகியிருந்த அழகு கலை நிலையம் ஒன்றின் பணிப்பெண்ணை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொடை நீதிதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், தலைமறைவாகியுள்ள அந்நிலையத்தின் உரிமையாளருக்கும் மற்றுமொரு பணிப்பெண்ணுக்கும் வெளிநாட்டு பயணத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மினுவாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய...

சரியான தலைவர் யார் என்பதைத் தீர்மானிக்க மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்; ராஜித சேனாரத்ன…!

இலங்கையில் இப்போது சரியான தலைவர்கள் யார் என்பதைத் தீர்மானிக்க மக்களுக்கு அரிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்று முன்னாள் அமைச்சரும் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். பேருவளை கடற்கரை விளையாட்டரங்கில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற 'ரணிலால் முடியும்' வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் உரையாற்றுகையில், "ஒருநாள் ஒரு வீட்டில்...

களுத்துறையில் வாள்களுடன் இருவர் கைது….!

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கித்துலாவ பிரதேசத்தில் 10 வாள்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் களுத்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். களுத்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கித்துலாவ பிரதேசத்தைச் சேர்ந்த 26 மற்றும் 30 வயதுடையவர்களே...

பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான விசேட அறிவிப்பு…!

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாளை (15.09) காலை 9.30 மணி முதல் மதியம் 12.15 மணி வரை நடைபெறவுள்ள நிலையில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு விசேட அறிவிப்பொன்றை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர வெளியிட்டுள்ளார். இவ்வருடம் ஐந்தாம் தரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் 2,849 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளது. புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறும்...

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவித்தல்…!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அனைத்து பிரச்சார நடவடிக்கைகளும் எதிர்வரும் 18ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவுபெற வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன் பிறகு, எந்தவொரு தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளையும் நடாத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக  தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. அதேவேளை , பொது அல்லது தனியார் வாகனங்களில் வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளை ஊக்குவிக்கும் வகையில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்கள் மற்றும் துண்டுபிரசுரங்கள்...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

கொழும்பை சுற்றியுள்ள பகுதிகளில் நீர் வெட்டு!

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் சனிக்கிழமை (ஜூலை 04) காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை...
- Advertisement -spot_img