பொதுச்சொத்துக்கள் துஸ்பிரயோகம் செய்யப்படுவது குறித்து அதிகளவில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக டிரான்பரன்சி இன்டநஷனல் ஸ்ரீலங்கா தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 11 ம் திகதி வரை பொதுச்சொத்து துஸ்பிரயோகம் தொடர்பில் 758 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

பொதுகட்டிடங்களை தேர்தல் நோக்கங்களிற்காக பயன்படுத்துவது குறித்து அதிகளவில்-343 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன,பொதுமைதானங்கள், அரசஅலுவலகங்கள்,பாடசாலைகள் போன்றவற்றை தேர்தல் பிரச்சாரங்களிற்காக பயன்படுத்துகின்றனர் என அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறான கட்டிடங்களை பயன்படுத்திய பின்னர் அதற்கான கட்டணங்களை செலுத்தாமை அல்லது ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்காக மாத்திரம் அவ்வாறான இடங்களை ஒதுக்குதல் குறித்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளன,மேலும் அந்த கட்டிடங்களில் தேர்தல் விதிமுறைகளிற்கு மாறாக சுவரொட்டிகள் போன்றவற்றை காட்சிப்படுத்துதல் குறித்த முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன என டிரான்ஸ்பரன்சி இன்டநஷனல் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here