Tuesday, June 30, 2026
No menu items!

K Dilakshan

6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை…!

நாட்டைச் சூழவுள்ள  கீழ் வளிமண்டலத்தில் தளம்பல் நிலை காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை இன்றும் (18.08) நாளையும் (19.08) மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள அவதானத்துடன் செயற்படுமாறு வானிலை...

வேன் மோதியதில் 8 வயது சிறுவன் உயிரிழப்பு…!

வாகரை பிரதான வீதியிலுள்ள பனிச்சங்கேணி பாலத்தில் வீதியை கடந்த சிறுவன் மீது வேன் மோதியதில் 8 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாழைச்சேனை மீராவோடையைச் சேர்ந்த 8 வயது சிறுவனே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளான். இந்த சிறுவனுடன் அவனது தாய், தந்தையர் முச்சக்கரவண்டியில்  பயணித்துக்கொண்டிருந்தபோது பனிச்சங்கேணி பாலத்தில் முச்சக்கரவண்டியின் முன்பக்க மின்விளக்கு எரியாமல், பழுதடைந்துபோனதால், பாலத்தில்...

தனியார் பஸ்,  மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதி விபத்து; ஒருவர் படுகாயம்…!

அவிசாவளை - கேகாலை வீதியில் ஹோட்டல் ஒன்றுக்கு முன்னால் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். தனியார் பஸ் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தின்போது, மோட்டார் சைக்கிள் செலுத்துநர் படுகாயமடைந்த நிலையில் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது…!

கொடவெஹெர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெலேகம பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொடவெஹெர பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொடவெஹெர பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கெலேகம, திகன்னேவ பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய நபராவார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடவெஹெர பொலிஸார் மேற்கொண்டு...

இன்றைய நாளுக்கான வானிலை….

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட  வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். நாட்டின் ஏனைய பிரதேசங்களின்  பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை...

நுவரெலியாவில் விசித்திர காற்றாடி திருவிழா…!

நுவரெலியாவில் முதல் முறையாக மாநகர சபை ஏற்பாட்டில் விசித்திர காற்றாடி திருவிழா இன்று (17.08) ஆரம்பமாகியுள்ளது. நுவரெலியா கிரகரி வாவி கரையோரத்தில் இடம்பெறும் குறித்த காற்றாடி போட்டியில் பலவிதமான வண்ணங்களில் விசித்திர காற்றாடிகளை செய்து வீரர்கள் பறக்க விடுகின்றனர். அழகிய வண்ணங்களில் நுணுக்கமான வடிவமைப்புகளுடன் அமைக்கப்பட்டிருந்த மீன்கள், பறவைகள், நட்சத்திரங்கள் போன்ற விசித்திரமான இராட்சத காற்றாடிகள் காண்போரை வியக்க...

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்த அநுரகுமார திசாநாயக்க…!

கொழும்பு பொரளை பேராயர் இல்லத்தில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை இன்று சனிக்கிழமை (17.08) நண்பகல் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திசாநாயக்க சந்தித்துள்ளார். நாட்டில் நிலைமை, அரசியல் நிலவரம் தொடர்பில் அருட்தந்தையர்களுடன் கலந்துரையாடிய அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் ஜனாதிபதி தோ்தலில் வெற்றி பெறுவதற்கான ஆசியை அவர்களிடம் பெற்றுக்கொண்டார். இந்த சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின்...

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர

சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் சர்வமத தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினார். ஆரியகுளம் நாகவிகாரை, யாழ்ப்பாணம் ஆயர் இல்லம், ஐந்து சந்தி ஜும்மா பள்ளிவாசல், நல்லை ஆதீனம், நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கும் திலித் ஜயவீர சென்றார். இதன்போது, சர்வஜன அதிகாரத்தின் கட்சித் தலைவர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, கெவிந்து குமாரதுங்க,...

வாக்காளர்களை பணத்திற்கு விற்க முடியாது; சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவிப்பு…!

நாட்டின் ஆட்சியாளரைத் தெரிவு செய்யும் பரிவர்த்தனை பணத்திற்கு விற்கக்கூடிய ஒன்றாக இருக்கக் கூடாது என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பல் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.  தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டத்தில் உள்ள விடயங்கள் ஆணைக்குழு எதிர்பார்த்தது போன்று நடக்கவில்லை என அவர் இதன்போது...

சஜித்துடன் இணைந்த பொதுஜன பெரமுன உறுப்பினர்…!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணாதாச கொடிதுவாக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார். அக்குரஸ்ஸ பிரதேசத்தில் இன்று (17.08) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலே அவர் சஜித்துடன் இணைந்துள்ளார்.

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

பிள்ளையானுக்கு ஜூலை 13 வரை விளக்கமறியல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும்,சிவநேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற 5 கொலைகள் தொடர்பில் எதிர்வரும் ஜூலை 13 ஆம் திகதி வரை...
- Advertisement -spot_img