Tuesday, June 30, 2026
No menu items!

K Dilakshan

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு…!

நாட்டில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 34 ஆயிரத்து 906 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலிருந்து பதிவாகியுள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 14,248 ஆகும். அதன்படி, கொழும்பு மாவட்டத்திலிருந்து 8,452 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மேலும், இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 16 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன. இதனால், பொதுமக்கள் அனைவரும்...

சுங்கவரி செலுத்தாமல் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது…!

சுங்கவரி செலுத்தாமல் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் இன்று (17.08) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு...

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி…!

வாகல்கட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெலிவெவ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாகல்கட பொலிஸார் தெரிவித்துள்ளனர். கெபிதிகொல்லேவ பிரதேசத்தைச் சேர்ந்த  23 வயதுடைய திருமணமான நபரொருவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது வீதியின் குறுக்கே கன்றை வயிற்றில் சுமந்திருந்த எருமை மாடு ஒன்று மீது மோதியதில் இந்த விபத்து...

சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் இருவர் கைது…!

ஹங்வெல்ல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட களுஅக்கல பிரதேசத்தில்  சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன்  இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக  ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹங்வெல்ல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹங்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 44 மற்றும் 53 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக...

நாட்டின் பல மாவட்டங்களிற்கு சிவப்பு எச்சரிக்கை…!

நாட்டில் பல மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துத்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, இலங்கையை அண்மித்துள்ள வளிமண்டலத் தாழ்வு நிலை காரணமாக தீவின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழையுடனான...

தமிழ் முற்போக்கு கூட்டணியின் செயற்பாட்டாளர்களைச் சந்தித்த பழனி திகாம்பரம்…!

கண்டி மாவட்டத்தின் நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியின் தமிழ் முற்போக்கு கூட்டணியின் செயற்பாட்டாளர்களைத் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவருமான பழனி திகாம்பரம் கினிகத்தேனையில் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நாவலப்பிட்டி நகரசபை,பார்கேபல்,வெஸ்டோல்,ஹைட்ரி,இம்புல்பிட்டிய,கடியலென ஆகிய பகுதிகளின் அமைப்பாளர்கள் இதன் போது கலந்து கொண்டனர். அத்துடன் தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச் செயலாளர் சோ. ஸ்ரீதரனும்...

வேட்பாளர்களின் பிரசார செலவுகளை கண்காணிக்க உருவாக்கப்பட்ட புதிய இணையத்தளம்…!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரசார செலவுகளை கண்காணிக்கும் வகையில் இலங்கையில் முதன்முறையாக இணையத்தளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. 'வோட் மணி மீற்றர்' என பெயரிடப்பட்டுள்ள இந்த இணையத்தளத்தின் வெளியீட்டு விழா கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த இணையத்தளம் ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா இன்ஸ்டிட்யூட் மற்றும் பாஃப்ரல் அமைப்பு உட்பட ஆறு முன்னணி தேர்தல்...

காட்டு யானையை சுட்டுக் கொன்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது…!

தம்புள்ளை – பக்கமூன பகுதியில் காட்டு யானையை சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பக்கமூன பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். பக்கமூன பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகள் முச்சக்கரவண்டியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டபோது அவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காட்டு யானை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூன்று கஜ முத்துக்களுடன் மூவர் கைது…!

ஒரு கோடியே 30 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று கஜ முத்துக்களுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். இலங்கை விமானப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் புத்தளம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவனல்லை மற்றும் புத்தளம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மூவரே...

ஹெரோயின் போதைப்பொருட்களுடன் மூவர் கைது…!

கல்கிசை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெஹிவளைப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் பெண் உட்பட மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிசை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்கிசை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தெஹிவளை பிரதேசத்தை சேர்ந்த 36 மற்றும் 39 வயதுடைய இரண்டு நபர்களும்...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

பிள்ளையானுக்கு ஜூலை 13 வரை விளக்கமறியல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும்,சிவநேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற 5 கொலைகள் தொடர்பில் எதிர்வரும் ஜூலை 13 ஆம் திகதி வரை...
- Advertisement -spot_img