Monday, June 29, 2026
No menu items!

K Dilakshan

கொட்டாவ-பன்னிப்பிட்டியவுக்கு இடையிலான அதிவேக வீதியில்  கடும் வாகன நெரிசல்… !

கொட்டாவ மற்றும் பன்னிப்பிட்டியவுக்கு இடையிலான அதிவேக வீதியில்  கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், இவ்வழியாக செல்லும் வாகன சாரதிகளை மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும்,நெரிசலை சீர் செய்யும் பணியில் நுகேகொடை போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் தேர் உற்சவம்..!

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் திராவிட முகப்புத்திர சிற்ப தேர் உற்சவம் இன்று 03 சனிக்கிழமை காலை பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றினை ஒருங்கே கொண்ட இந்த ஆலயத்தின் மஹோற்சவமானது கடந்த 26ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ ஆலய குரு இரத்திபூரண...

மாத்தறையில் வளர்ப்பு நாயையும் அதன் குட்டிகளையும் விழுங்கிய மலைப்பாம்பு…!

மாத்தறை, மாகந்துர பகுதியில்  வீடொன்றில் வளர்க்கப்பட்ட நாயையும் அதன் நான்கு குட்டிகளையும் மலைப்பாம்பு ஒன்று விழுங்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டு முற்றத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த நாயும் அதன் நான்கு குட்டிகளும் காணாமல் போயுள்ள நிலையில் மலைப்பாம்பு ஒன்று அசைய முடியாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர், தங்களது வளர்ப்பு நாயையும் அதன் நான்கு குட்டிகளையும் இந்த மலைப்பாம்பு...

மாணிக்கக்கல் வர்த்தகர்களிடமிருந்து இரண்டு கோடி ரூபா கொள்ளை; 6 பேர் கைது…!

சீதுவ லியனகேமுல்ல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மாணிக்கக்கல் வர்த்தகர்கள் இருவரிடம் இருந்து இரண்டு கோடி ரூபா கொள்ளையடித்த  சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இருவர் உட்பட 6 பேரை  கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இக் கொள்ளை சம்பவம் தொடர்பில், வாகரை விசேட அதிரடிப்படை முகாமில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும், ...

இலங்கை கடற்படை ரோந்து படகு முட்டியதில் உயிரிழந்த மீனவரின் சடலம் கடல் வழியாக இராமேஸ்வரம் கொண்டு செல்லப்பட்டது.

இராமேஸ்வரத்திலிருந்து மீன் பிடிக்க சென்று இலங்கை கடற்படை ரோந்து படகு மோதியதில் மீன்பிடி படகு நடுக்கடலில் மூழ்கியதில் சடலமாக மீட்கப்பட்ட மீனவர் உடல் மற்றும் உயிருடன் மீட்கப்பட்ட இரண்டு மீனவர்கள் இன்று (3) அதிகாலை  கடல் வழியாக இராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தனர். இலங்கை கடற்படை ரோந்து படகு ஒரே முட்டு முட்டியதில்...

முட்டை இறக்குமதி தொடர்பான அறிவித்தல்…!

விவசாய உற்பத்திப் பொருட்களின் விலையை ஒழுங்குபடுத்துவதற்கான முறைமையை அரசாங்கம் தயாரிக்கத் தவறியதன் காரணமாகவே முட்டைகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அவ்வாறானதொரு முறையை தயார் செய்யாமல் முட்டைகளை இறக்குமதி செய்வதன் ஊடாக உள்நாட்டு தொழில் அழிவை சந்திக்கும் என சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

போஷாக்கு விழிப்புணர்வு தொடர்பான விழிப்புணர்வு பேரணிகள்…!

World vision ஒழுங்கமைப்பில்  சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி அனுசரணையில் போஷாக்கு விழிப்புணர்வு பேரணி சாவகச்சேரி நகரில் இடம் பெற்றுள்ளது. காலை 8:30 மணியளவில் சாவகச்சேரி நகரசபை முன்பிருந்து ஆரம்பித்து சாவகச்சேரி சந்தை பகுதியால் பேரணியாக சென்று ஏ9 வீதி வழியாக மீண்டும் அதே இடத்தை சென்று நிறைவடைந்தது. இதில் அனைவருக்கும் போஷாக்கு உணவு, இயற்கை உணவு...

ஆடி அமாவாசை விரத கறுப்பு மண்சட்டிகள் விற்பனை அதிகரிப்பு..!

ஆடி அமாவாசை விரதமானது பிதாவினை இழந்தவர்களால் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்நிலையில் உணவுகளை சமைப்பதற்கான கறுப்பு மண்சட்டிகளின் விற்பனை சூடுபிடித்துள்ளது யாழ். திருநெல்வேலி பொதுசந்தைக்கு அருகாமையில்  கறுப்பு மண்சட்டிகள் இன்று விற்பனையாகி வருகின்றது. ஒரு பெரிய கறுப்பு மண் சட்டியின் விலை 250 ரூபாவில் இருந்து 300 ரூபா விற்பனையாகி வருகின்றது. ஒரு சிறிய கறுப்புச்சட்டியின் விலை 80 ரூபாவில் இருந்து...

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது…! 

வத்தளை, மஹாபாகே பகுதியில் நபர் ஒருவரிடமிருந்து 150,000 ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் மஹபாகே பொலிஸ் போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றுபவர் என தெரியவந்துள்ளது. உஸ்வெட்டிகெய்யாவ பகுதியில் வசிக்கும் ஒருவருக்கு 'யுக்திய' நடவடிக்கையின் கீழ்  அசௌகரியம் ஏற்படுத்தாமல் இருப்பதற்கும், போதைப்பொருள் தொடர்பான  பெயர் பட்டியலில் அவரது...

வடக்கின் உயர் பொருளாதார திறனை வடக்கினதும் நாட்டினதும் அபிவிருத்திக்காக பயன்படுத்திக்கொள்வோம்..!

புதிய பொருளாதார, அரசியல் முறைமையுடன் முன்னேறிச் செல்வதற்காக ஒன்றிணைவது கல்வியாளர்கள், தொழில் வல்லுநர்களின் பொறுப்பாகும். இனப்பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் - நல்லிணக்கமும் சமத்துவமும் மிக முக்கியமானவை. சிங்கள மொழியுடன் தமிழையும் ஊக்குவிக்க வேண்டும் - தமிழகத்தில் எற்படவிருக்கும் பொருளாதார வளர்ச்சியினால் இலங்கையர்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும். யாழ்ப்பாணத்தில் கல்வியியலாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு யாழ்ப்பாணம் உள்ளிட்ட...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

பெற்றோல், டீசல் விலை குறைப்பு – இன்று நள்ளிரவு முதல் அமுல்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) பெற்றோல் ஒக்டேன் 92 மற்றும் ஒட்டோ டீசல் விலைகளை இன்று ஜூன் 29 நள்ளிரவு முதல் குறைப்பதாக அறிவித்துள்ளது. இதற்கமைய, பெற்றோல்...
- Advertisement -spot_img