Monday, June 29, 2026
No menu items!

K Dilakshan

அனுராதபுரத்தில் இனம்தெரியாத நபரின் சடலம் மீட்பு….!

அனுராதபுரம் மல்வத்து ஓயா புதிய பாலத்திற்கு அருகில் இனந்தெரியாத நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சின்ஹ ​​தூணுக்கு அருகில் புதிய மல்வத்து பாலத்தின் கீழ் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் இறந்தவர் யாரென இதுவரை அடையாளம் காணப்படவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் தலைமையக பொலிஸ் பரிசோதகர் ஆர்.எம்.ஜெயவீரவின் மேற்பார்வையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

யாழில் கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது….!

யாழ்ப்பாணம், செம்மணி பகுதியில் கஞ்சா போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர்  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவரிடமிருந்து 20 கிலோ 175 கிராம் கஞ்சா போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது. யாழ், வளைவுக்கு அருகில் இளைஞர் ஒருவர் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடுவதாக பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்த அதிரடிப்படையினர் மேற்படி இளைஞரை...

தமிழ் இளைஞர்கள் தொடர்பில் நாமல் ராஜபக்சவின் கருத்து..!

வடக்கு - கிழக்கு தமிழ் இளைஞர்களை நாடாளுமன்றத்திற்குள் உள்ளீர்ப்பதில் பொதுஜன பெரமுன முனைப்புடன் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். மேலும், எதிர்காலத்தில் அவர்கள் நாட்டின் மிக முக்கிய பொறுப்புக்களை வகிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். ஊடகம் ஒன்றிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், எதிர்காலத்தில் வடக்கிலிருந்து தமிழ் இளைஞர்...

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு எடுத்துள்ள நடவடிக்கை…!

ஜனாதிபதித் தேர்தலின் போது பொலிஸார் உள்ளிட்ட அரச அதிகாரிகள் மேற்கொண்ட தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் ஆணையாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். 0767914696 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அல்லது 0112505566 என்ற தொலைநகல்...

சுமார் 40 இலட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் தொடர்பில் வெளியான ஆய்வுத் தகவல்கள்…!

வடக்குக் கிழக்கு உள்ளிட்ட இலங்கைத்தீவில் காணப்படக்கூடிய வாக்காளர்களில் சுமார் 40 இலட்சத்துக்கும் அதிகமானோர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பது யாருக்கு என்பது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லை என அரசாங்கத்தின் உளவுத்துறை நடத்திய ஆய்வில் தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசாங்க உளவுத்துறை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில், கடந்த தினங்களில் இரகசியமாக வீட்டிற்கு வீடு சென்று நடத்திய ஆய்வில்...

யாழிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விஜயம்…!

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நேற்று நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை நல்லை ஆதீனத்தில் சந்தித்து ஆசிபெற்றுக்கொண்டார். இதேவேளை, யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பின்போது இலங்கையின் தற்போதைய அரசியல் நிலை, இராணவ கட்டுப்பாட்டிலுள்ள...

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆரிய குளம் நாகவிகாரைக்கு விஜயம்..!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆரிய குளம் நாகவிகாரைக்கு விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டார். யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நேற்று நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை நல்லை ஆதீனத்தில் சந்தித்து ஆசிபெற்றுக்கொண்டார். இதேவேளை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை ஜனாதிபதி ரணில்...

பாராளுமன்றத்திற்கு அருகில் விபத்து…!

பாராளுமன்றத்திற்கு அருகில் இன்று (03.08) சனிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் நான்கு இளைஞர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதிக வேகத்துடன் பயணித்த கார், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது, நான்கு இளைஞர்கள் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வீதியை விட்டு விலகி அருகிலிருந்த வீடொன்றின் மீது மோதிய வேன்… !

அயகம - எகல்ஓயா வீதியில் அயகம, கவரகிரிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். வேன் சாரதி உறங்கியதால் வேன் வீதியை விட்டு விலகி அருகிலிருந்த வீடொன்றின் சுவரில் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றள்ளது. இந்த விபத்தின் போது வேனில் பயணித்த மூவர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

புத்தல – கதிர்காமம் வீதியில் அதிகரித்த புலிகளின் நடமாட்டம்…!

புத்தல - கதிர்காமம் வீதியில் புலிகளின் நடமாட்டம் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளதால் பிரதேசவாசிகள் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர். சீரற்ற காலநிலை காரணமாகவும் உணவு தேவைக்காகவும் இந்த புலிகள் பெரும்பாலும் பிற்பகல் மற்றும் இரவு வேளைகளில் வீதியில் நடமாடுகின்றன. எனவே, புத்தல - கதிர்காமம் வீதியில் பயணிக்கும் வாகனங்கள் குறிப்பாக மோட்டார் சைக்கிள்களில் பயணிப்பவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

ஈரான்-அமெரிக்க பதற்றம்; தங்க விலை 1% வரை வீழ்ச்சி

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான புதிய பதற்றம் காரணமாக எண்ணெய் விலை அதிகரித்து, பணவீக்கம் மற்றும் வட்டி விகித அதிகரிப்பு குறித்த அச்சம் அதிகரித்துள்ள நிலையில் இன்று...
- Advertisement -spot_img