Saturday, June 27, 2026
No menu items!

Tamil Vani

நீச்சல் குளத்தில் மூழ்கி 12 வயது சிறுவன் பலி..!!

ஓபநாயக்க பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றின் நீச்சல் குளத்தில் மூழ்கி 12 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இம்புல்தென்ன பகுதியைச் சேர்ந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தனது நண்பர்களுடன் நீச்சல் விளையாடிக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 மணிநேரம் நீர் வெட்டு..!!

பராமரிப்பு பணிகள் காரணமாக, கம்பஹா மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் இன்று (09) 10 மணிநேரம் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படும். அதன்படி, நிட்டம்புவ கந்தஹேன, கோங்கஸ்தெனிய, பின்னகொல்லவத்த ,...

இன்றைய நாளுக்கான வானிலை..!

சப்ரகமுவ, மேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே இலேசான மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். வானிலை தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் சீரான வானிலை நிலவக்கூடும். நீர்கொழும்பு தொடக்கம் காலி ஊடாக மாத்தறை  வரையான கடல்...

விமான நிலையத்தின் வருகை முனையத்தில் புதிய சாரதி அனுமதிப் பத்திர கிளை அலுவலகம் திறப்பு!!!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு 05 நிமிடங்களுக்குள் இலங்கையில் செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கும் மோட்டார் போக்குவரத்துத் துறையின் புதிய கிளை அலுவலகம் திறக்கப்பட்டது. இதனை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்துள்ளார். ஒரு வருடத்திற்கு மேல்...

18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் – முன்னாள் இராஜாங்க அமைச்சர்!!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கிரிபத்கொடை பகுதியில் உள்ள அரச காணியை போலி பத்திரங்களைப் பயன்படுத்தி விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உலக நீச்சல் சம்பியன்ஷிப்பில் சாதனை படைத்த லோன் மாசண்ட்!!

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக நீச்சல் சம்பியன்ஷிப்பில், 200 மீற்றர் தனிநபர் மெட்லி நீச்சலில் பிரான்ஸ் வீரர் லோன் மாசண்ட் உலக சாதனை படைத்துள்ளார். அரையிறுதி சுற்றில் பந்தய இலக்கை 1 நிமிடம், 52.61 விநாடிகளில் கடந்த அவர், 14 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார். இதற்கு முன் 2011  இல் அமெரிக்காவின் ரயான் லாக்டே 1 நிமிடம்,...

தவறான தரவுகளின் அடிப்படையில் மின் உற்பத்தி நிலையத்திற்கான அமைச்சரவை அனுமதி!!

தவறான தரவுகளின் அடிப்படையில் சஹஸ்தனவி LNG மின் உற்பத்தி நிலையத்திற்கான அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சஹஸ்தனவி மின் உற்பத்தி நிலைய மோசடி தொடர்பாக விசேட கூற்றொன்றை முன்வைத்து இன்று (04) வெளிக்கொணர்ந்த போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். சஹஸ்தனவி திரவப்படுத்தப்பட்ட...

புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செல்லுபடியற்றதாக்கி உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உயர் நீதிமன்றத்தால் விசாரணையின்றி தள்ளுபடி!!!

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் அண்மையில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செல்லுபடியற்றதாக்கி உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அடிப்படை உரிமைகள் மனுக்கள் இன்று(04) உயர் நீதிமன்றத்தால் விசாரணையின்றி தள்ளுபடி செய்யப்பட்டன. நீதியரசர்களான அச்சல வெங்கப்புலி மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய இருவரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் இந்த தீர்ப்பை அறிவித்தன. பாதுகாப்பு ஒத்துழைப்பு, வெற்றிகரமான டிஜிட்டல் தீர்வுகளைப்...

நேர்வழியில் போராடி தோல்வியடையலாம் அது குறுக்கு வழியில் வெற்றியைப் பெற்றுக்கொள்வதைவிட சிறப்பானது -நா.வேதநாயகன்

விளையாடும்போது வெற்றி என்பது எங்களுக்கு இலக்காக இருக்கவேண்டும். அந்த வெற்றியை உரிய தடத்தின் ஊடாகவே நாங்கள் பெற்றுக்கொள்ளவேண்டும். வெற்றியைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காக குறுக்குவழிகளை நாங்கள் நாடக்கூடாது. அது விளையாட்டின் பண்பல்ல. நாங்கள் நேர்வழியில் போராடி தோல்வியடையலாம். அது குறுக்கு வழியில் வெற்றியைப் பெற்றுக்கொள்வதைவிட சிறப்பானது. இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள்...

மன்னார் தீவு பகுதியில் புதிதாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க மக்கள் எதிர்ப்பு-அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்து திட்டத்தை நிறுத்த நடவடிக்கை!

மன்னார் தீவு பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும்,தற்போது மன்னார்-மதவாச்சி பிரதான வீதியூடாக  கொண்டு வரப்பட்டு கொண்டு இருக்கும் காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கான பொருட்களை மன்னார் நகருக்குள் கொண்டு வருவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து மன்னார் மக்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை (4) காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு...

About Me

863 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

நடிகர் மாதவனுக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கெளரவம்!

இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ (Padma Shri) விருது, தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் பன்மொழி நடிகரான ஆர்.மாதவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான பத்ம...
- Advertisement -spot_img