Monday, May 25, 2026
No menu items!

வர்த்தகம்

இந்தியா எடுத்துள்ள தீர்மானம்..!

இலங்கைக்கு ஆயிரக்கணக்கான மெட்ரிக் டொன் பெரிய வெங்காயத்தை விநியோகிக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும், உள்நாட்டுச் சந்தையில் அதிக அளவில் வெங்காயம் கையிருப்பை வைப்பதையும் நோக்கமாக கொண்டு இந்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு தற்காலிக தடை விதித்துள்ளது. இந்நிலையில் மோடி அரசின் அண்டை நாடுகளுக்கு முதலிடம் என்ற வெளியுறவுக் கொள்கையின் கீழ் தற்போது...

குறைந்துள்ள வட்டி வீதம் – அமைச்சர் பந்துல வெளியிட்ட தகவல்

பூஜ்ஜியமாகக் குறைந்து போயிருந்த நாட்டின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு இன்று 4.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதென போக்குவரத்து மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று(03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அந்த நேரத்தில் டொலரின் பெறுமதி 400 ரூபாவிற்கு கிட்டியதாக காணப்பட்டது. ஆனால் இன்றளவில் டொலரின்...

பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை..!

தமிழ் சிங்கள புத்தாண்டை  முன்னிட்டு தள்ளுபடி விற்பனை என்ற பெயரில் காலாவதியான பொருட்கள் விற்பனைக்கு வரும் சாத்தியம் காணப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் (CAA) தகவல் பணிப்பாளர் அசேல பண்டார பொதுமக்களுக்கு எச்சரிக்கை  விடுத்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்தனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், பொருட்களுக்கு தள்ளுபடி மற்றும் பேரம் பேசும்...

 இறக்குமதி செய்யப்படவுள்ள சீன வெங்காயம்..!

சீனாவிடம் முன்பதிவு செய்யப்பட்ட பெரிய வெங்காயம் இன்னும் 5 நாட்களில் நாட்டிற்கு கிடைக்கப்பெறுமென வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வெங்காயத் தொகை நாட்டிற்கு கொண்டுவரப்பட்டதும், உள்நாட்டு சந்தையில் வெங்காயத்தின் விலை குறைவடையுமென வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதற்கு மேலதிகமாக பெரிய வெங்காயத்திற்கு பதிலாக இளஞ்சிவப்பு வெங்காயத்தை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இளஞ்சிவப்பு...

அரிசி வழங்க அமைச்சரவை அனுமதி…!

குறைந்த வருமானங் கொண்ட குடும்பங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 10 கிலோ கிராம் அரிசி வழங்கும் வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கிணங்க, சிறிய மற்றும் நடுத்தரளவிலான நெல் ஆலை உரிமையாளர்களை இணைத்துக் கொண்டு மாவட்டச் செயலாளர்கள்,அரசாங்க அதிபர் மூலமாக அடையாளங் காணப்பட்டுள்ள குறைந்த வருமானங் கொண்ட 2.74 மில்லியன் குடும்பங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 10 கிலோக்கிராம்...

பால் மா விலை குறைப்பு..!

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நலின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அந்த வகையில், இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகள் கிலோ ஒன்றிற்கு 100 - 150 ரூபா வரை குறைக்கப்படவுள்ளது. அதன்படி எதிர்வரும் வெள்ளிக்கிழமை மார்ச் 15 ஆம் திகதி முதல் இந்த விலைக்குறைப்பு அமுழுக்கு வருமென அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு..!

நாட்டில் சுமார் 252 மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாட்டு நிலை ஏற்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்க நிலையத்தின் தலைவர் டொக்டர் சமால் சஞ்சீவ தெரிவித்துள்ளார். முன்னாள் சுகாதார அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் பதவி விலகி ஐந்து மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் தற்போதைய சுகாதார அமைச்சரும், அமைச்சின் செயலாளரும் மருந்துப் பொருள் தட்டுப்பாட்டுக்கு...

சர்வதேச சந்தையில் சீனியின் விலையில்

சர்வதேச சந்தையில் சீனியின் விலை 2.89 வீதத்தால் அதிகரித்துள்ளது. சீனி உற்பத்தியில் உலகின் முன்னணி நாடான பிரேஸிலில் உற்பத்திகள் குறைவடைந்துள்ளமையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இந்தியாவிலும் சீனி உற்பத்தி 9 வீதத்தால் குறைந்துள்ளதுடன் சீனி ஏற்றுமதிக்கு இந்தியா விதித்துள்ள கட்டுப்பாடுகளும் சீனி விலையின் அதிகரிப்புக்கு காரணமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கத்தரிக்காய் தொடர்பில் எச்சரிக்கை

சந்தையில் விற்பனை செய்யப்படும் கத்தரிக்காயில் மனித உடலுக்கு ஆபத்தான கிருமிநாசினிகள் காணப்படுவதாக ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உணவு விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஆய்வு நிறுவன சிரேஸ்ட பேராசிரியர் கலாநிதி பியூமி அபேசுந்தர இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் சந்தையில் கிடைக்கப் பெற்ற 23 வீதமான கத்தரிக்காய் வகைகளில் மனிதனுக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடிய கிருமிநாசினிகள்...

உணவுப் பிரியர்களுக்கு கிடைத்துள்ள மகிழ்ச்சியான தகவல்..!

இன்று நள்ளிரவு முதல் மின்சார கட்டணம் குறைக்கப்பட்டதன் காரணமாக  உணவு பொருட்களின் விலையினை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, ஒரு கோப்பை தேநீர் 05 ரூபாயினாலும், ஒரு கோப்பை பால் தேநீர் 10 ரூபாயினாலும், சிற்றுண்டிகள் 10 ரூபாயினாலும், குறைக்கப்படவுள்ளன. அத்துடன், சோற்றுப்பொதி ஒன்று 25 ரூபாயினாலும் கொத்து...
- Advertisement -

Latest News

வேலைவாய்ப்பு மோசடி; ஒரு வருடத்துக்குள் பணத்தை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு

வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி ஏமாற்றப்பட்டவர்களுக்கு ஒரு வருடத்துக்குள் பணத்தை திருப்பி செலுத்துமாறு ரெயின்போ மேன்பவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவன உரிமையாளருக்கு கங்கொடவில நீதவான் நீதிமன்றம்...