Friday, July 3, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

புகையிலை, மதுபானம் பயன்பாட்டினால் வருடத்தில் 22000 பேர் வரை உயிரிழப்பு

புகையிலைப் பயன்பாட்டினால் வருடந்தோறும் 22,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர் என புகையிலை மற்றும் மதுபானம் மீதான தேசிய அதிகாரசபை தெரிவித்துள்ளது. புகையிலைப் பயன்பாட்டினால் 200-க்கும் மேற்பட்ட நோய்கள் ஏற்படுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதிகாரசபையின் தலைவர்,வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 2026-ஆம் ஆண்டு உலகப் புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்றபோது வைத்தியர் ஆனந்த...

மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவல்; வழிகாட்டுதல்கள் வெளியானது

இலங்கையின் சுகாதார அமைச்சு,தற்போது பரவி வரும் மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. குறிப்பாக பாடசாலைகள் மற்றும் சமூக அமைப்புகளில் இவை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாடசாலை செல்லும் வயதுடைய குழந்தைகளிடையே நோய்த்தொற்று வேகமாக அதிகரித்து வருவதுடன் காய்ச்சல், தலைவலி, வாந்தி.போன்றவை ஏற்பட்டு பெரும்பாலானோர் சுமார் 7 நாட்களில் குணமடைந்து வருகின்றனர்...

இந்திய அன்பளிப்பு; 134 கெப் ரக வாகனங்களை வட மாகாணத்திற்கு வழங்க திட்டம்

இலங்கை காவல்துறையின் பயன்பாட்டிற்காக இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 134 கெப் ரக வாகனங்கள், இன்று காலை (25) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டன. குறித்த வாகனங்களுக்கான இந்திய அரசாங்கம் 300 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இந்த வாகனங்கள் வட மாகாண காவல் நிலையங்களின் பயன்பாட்டுக்கு வழங்கப்பட உள்ளன. இதன்போது எதிர்காலத்திலும்...

தலா 5 இலட்சம் ரூபாய் பிணையில் விடுவிக்கப்பட்ட விமலும் அவரது சகாவும்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு கடுவலை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. வாக்குமூலம் அளிப்பதற்காக தலங்கம பொலிஸ் நிலையத்திற்கு சென்ற சந்தர்ப்பத்தில் வீரவன்ச, இன்று காலை கைது செய்யப்பட்டார். பத்தரமுல்லையில் உள்ள தேசிய போர் நினைவிடம் அருகே பொலிஸ் பணிகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, நேற்று ஆஜராகத் தவறிய வீரவங்சவுக்கு, இன்று தலங்கம பொலிஸ்...

வாகனத் தகடுகளுக்கான அபராதம் தொடர்பாக காவல்துறை விளக்கம்

இலங்கையில் தற்காலிக வாகனப் பதிவுத் தகடுகளை பயன்படுத்துவோரில் ஒழுங்கு விதிகளை பின்பற்றாது அச்சிடப்பட்டு பயன்படுத்துவோருக்கு மாத்திரமே அபராதம் விதிக்கப்படுவதாக காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது. வாகனப் பதிவுத் தகடுகளை அச்சிடுவதற்கான விநியோகஸ்தர்கள் இன்மையால், இலங்கையில் சுமார் 10 மாதங்களாக அதிகாரப்பூர்வ வாகனப் பதிவுத் தகடு தயாரிப்பு தாமதமாகியுள்ளன. இதன் காரணமாக சுமார் 400,000 பதிவு தகடுகள் தயாரிக்கும் செயற்பாடு தாமதமாகியுள்ளன....

வாகன கொள்வனவிற்காக பெறக்கூடிய கடன் விகிதம் அறிவிப்பு!

வாகன கொள்வனவிற்காக மக்கள், கடன் வசதிகளின் ஊடாக பெறக்கூடிய கடனுக்கான பெறுமதி (LTV) விகிதங்களில் கடுமையான அதிகபட்ச வரம்புகளை அறிமுகப்படுத்தி இலங்கை மத்திய வங்கி புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. இன்று 25 முதல் இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு கொண்டு வரப்படுகின்றன. இதற்கமைய பயன்படுத்தப்பட்ட வாகனம் ஒன்று இலங்கையில் 1 வருடத்திற்கும் மேலாகப் பதிவு செய்யப்பட்டிருந்தால், வங்கிகள் அதன்...

ஜனாதிபதி அநுர மீண்டும் தெரிவு செய்யப்படுவதை தடுக்க முடியாது! சுனில் குமார கமகே

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 2029-ல் மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவதை யாராலும் தடுக்க முடியாது என அமைச்சர் சுனில் குமார கமகே குறிப்பிட்டுள்ளார். மேலும், தற்போதைய அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்தி, மக்கள் நம்பிக்கையை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றிய அமைச்சர், தவறான முடிவெடுக்கும் தன்மையால் இலங்கை முன்பு "திசையற்றதாக" மாறியிருந்ததாகவும், எனினும் தற்போதைய அரசாங்கம்...

வேலைவாய்ப்பு மோசடி; ஒரு வருடத்துக்குள் பணத்தை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு

வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி ஏமாற்றப்பட்டவர்களுக்கு ஒரு வருடத்துக்குள் பணத்தை திருப்பி செலுத்துமாறு ரெயின்போ மேன்பவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவன உரிமையாளருக்கு கங்கொடவில நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த நிறுவனம் ரொமானியா நாட்டில் வேலைவாய்ப்புகளை பெற்றுத் தருவதாக உறுதியளித்து சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக பணத்தை பெற்றுக்கொண்டுள்ளது. எவ்வாறாயினும் அவர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுக்கொடுக்கப்படவில்லை. இந்த விடயம் தொடர்பாக...

அடுத்த வருடத்துக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த திட்டம்; டில்வின் சில்வா

டித்வா புயலின் தாக்கத்தை தொடர்ந்து அனர்த்த முகாமைத்துவ மையத்திற்கு சுமார் 500 பில்லியன் ருபாய் ஒதுக்கப்பட்ட நிலையில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த முடியாத நிலை ஏற்பட்டதாக ஜேவிபியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். பாரிய சிக்கல்கள் எதுவும் எழாத பட்சத்தில், அடுத்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல்களை நடத்த அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அவர்...

தேரரின் 10 வருட சிறைத்தண்டனை மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் ரத்து!

பாலியல் வன்கொடுமை வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பௌத்த துறவியின் தண்டனையை இலங்கை மேல்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. பதின்வயது முறைப்பாட்டாளரின் சாட்சியத்தில் இருந்த முக்கிய முரண்பாடுகள் காரணமாக அது "நம்பகத்தன்மையற்றது" என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2016 மார்ச் மாதம், விகாரையின் குடியிருப்புப் பகுதிக்குள் வைத்து 13 வயது சிறுவனைத் துன்புறுத்தியதாக சீதாவக்க சொரத்த...
- Advertisement -

Latest News

கொழும்பை சுற்றியுள்ள பகுதிகளில் நீர் வெட்டு!

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் சனிக்கிழமை (ஜூலை 04) காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை...