Monday, July 13, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை ரயில் சேவை ஆரம்பம்…!

கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்குமிடையிலான ரயிலை இன்று (02.11.2024) முதல் இயக்குவதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்த இன்டர்சிட்டி ரயில் இயக்கப்படும் என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இடிபோலகே தெரிவித்தார். காலை 5.30 மணிக்கு கொழும்பு கோட்டை நிலையத்திலிருந்து புறப்படும் ரயில் இரவு 11.38 மணிக்கு காங்கேசன்துறை நிலையத்தை அடைந்து...

அனைத்து வீடுகளிலும் பத்து வருடங்களுக்குள் கார்; தேசிய மக்கள் சக்தி உறுதி…

வெளிநாடுகளில் ஒரு மாத வருமானத்தில் வாகனமொன்றை கொள்வனவு செய்ய முடியும். அத்தகைய பொருளாதார நிலையை உருவாக்குவதே தேசிய மக்கள் சக்தியின் எதிர்பார்ப்பு என அக்கட்சியின் காலி மாவட்ட வேட்பாளர் குழுவின் தலைவர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார். ”நம் வாழ்நாள் முழுவதும் சம்பாதித்த பணத்தை சேகரித்தாலும், ஒரு டெக்டரைக் கூட வாங்க முடியாது. ஜப்பானில் உற்பத்தி செய்யப்படும் Vitz...

வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் அரச பணியாளர்களுக்கு வேதனம் அதிகரிக்கப்படும் என அறிவித்ததாக குற்றம் சுமத்திய பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய.!

பாதீடு ஒன்று முன்வைக்கப்படாத நிலையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் அரச பணியாளர்களுக்கு வேதனம் அதிகரிக்கப்படும் என அறிவித்ததாகப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். பிட்டகோட்டே பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் நெருங்கிய சந்தர்ப்பத்திலேயே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவ்வாறான...

குழந்தையொன்று தண்ணீர் என நினைத்து அமிலம் குடித்ததில் உயிரிழப்பு..!

கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்தோட்டை, பியசேனபுர பகுதியில் 2 வருடங்கள் மற்றும் 6 மாதங்களேயான குழந்தையொன்று தண்ணீர் என நினைத்து அமிலம் (அசிட் திராவகம்) குடித்ததில் உயிரிழந்துள்ளது. தெல்தோட்டை நகரிலுள்ள தங்க வியாபார நிலையமொன்றுக்கு தனது குழந்தையுடன் தந்தையொருவர், சென்றுள்ளார். அங்கு பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த அசிட்டையே குழந்தை அருந்தியதாக தெரியவந்ததையடுத்து குழந்தை தெல்தோட்டை வைத்தியசாலைக்கு...

200 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ஹெரோயின் கண்டுபிடிப்பு..!

செவனகல பகுதியிலுள்ள வீடொன்றின் முற்றத்தில் புதைக்கப்பட்ட நிலையில் நேற்று முந்தினம் (31) கண்டுபிடிக்கப்பட்ட 54 கிலோ ஹெரோயின் 200 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியானது என பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த போதைப்பொருள் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஆர்மி சூட்டிக்கு சொந்தமானது என விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். தம்மிக்க சமன் குமார என்ற நபர் கடந்த 30ஆம் திகதி பொரலஸ்கமுவ...

பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கை..!

துன்ஹிந்த - பதுளை வீதியின் ஹம்பகஸ்ஹந்திய பிரதேசத்தில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மாணவர்கள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. விபத்து இடம்பெற்ற போது, ​​கொத்தலாவல பாதுகாப்புக் பல்கலைக்கழகத்தின் 39வது பாடநெறியைச் சேர்ந்த 36 மாணவர்கள், 03 விரிவுரையாளர்கள், குழுவுக்குப் பொறுப்பான ஆலோசகர், பேருந்தில் பயணித்த சிரேஷ்ட இராணுவ...

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த..!

விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீர் சுகவீனம் காரணமாக அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மிரிஹான பகுதியில் உள்ள அவரது மனைவியின் இல்லத்திலிருந்து இலக்கத் தகடு இல்லாத மகிழுந்து ஒன்று மீட்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். கண்டி கட்டுகஸ்தொட்டை பகுதியில்...

குறைக்கப்பட்ட எரிபொருள் விலை..!

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குறைக்கப்பட்ட எரிபொருள் விலை போதுமானதாக இல்லை என பல்வேறு தரப்பினரும் குறிப்பிடுகின்றனர். நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் ஒக்டைன் 95 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டு 371 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது. அதேநேரம் சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலையும் 6 ரூபாவால் குறைக்கப்பட்டு...

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்திற்கு முன்பாக மரநடுகை நிகழ்வு….

நாளைய தலைமுறைக்கான என்ற தொனிப்பொருளில் வன்னி தமிழ் மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்றையதினம் (02.11.2024) மரம் நாட்டப்பட்டது. கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்திற்கு முன்பாக உள்ள பகுதிகளில் மரம் நாட்டப்பட்டது. மதத்தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப்பணிகள் ஆரம்பம்…

எதிர்வரும் நவம்பர் 27, தமிழ்த்தேசிய மாவீரர் நாளின் முன்னாயத்தப் பணிகளின் ஆரம்பமாக, கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்றையதினம் சிரமதானப் பணிகள் மாவீரர் பணிக்குழுவின் வழிகாட்டலில் ஆரம்பிக்கப்பட்டன. கனகபுரம் மாவீரர் பணிக்குழுவினால், முறைமைப்படுத்தப்பட்ட வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட மேற்படி சிரமதானப் பணிகளில் தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
- Advertisement -

Latest News

அதர்வாவின் வெற்றி படமாக மாறும் ‘இதயம் முரளி’

அதர்வாவின் "இதயம் முரளி" திரைப்படம் வெளியாகுவதற்கு முன்னரே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. தற்போது 'இதயம் முரளி' படம் 3 நாட்களில் உலகளவில் இந்திய...