Saturday, July 4, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

கடையொன்றில் ஏற்பட்ட தீ விபத்து…!

மாத்தளையில் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு முன்பாக உள்ள கடையொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கார்ட்போர்ட் பெட்டிகள் மற்றும் வெவ்வேறு வகையான பைகள் விற்பனை செய்யப்படும் கடையிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பரவிய தீயில் கடை முழுவதும் எரிந்து சேதமடைந்துள்ளதாக பொலிஸார்...

சிலாபத்தில் கொலை செய்யப்பட்ட வயோதிபப் பெண்…!

புத்தளம், சிலாபம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விலத்தவ பிரதேசத்தில் வயோதிபப் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிங்கிரிய, முகலந்ஹேன பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய வயோதிபப் பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டவர் விலத்தவ பிரதேசத்தில் வீதியோரத்தில் உயிரிழந்த நிலையில் தரையில் வீழ்ந்து கிடந்துள்ளதாக கொலை செய்யப்பட்டவரது மகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, பொலிஸாரால் மேற்கொள்ளப்ட்ட...

சகோதரனுடன் தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் கீழே விழுந்து மரணம்…!

சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் ஒருவர் கீழே விழுந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். சாந்தை - பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய  பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 11ஆம் திகதி குறித்த பெண் பொன்னாலை கிருஷ்ணன் கோவிலுக்குச் சென்றுள்ளார். பின்னர் தனது சகோதரனுடன் தலைக்கவசம் இன்றி மோட்டார்...

நாட்டில் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை…!

நாட்டில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக களுத்துறை, மாத்தறை மற்றும் காலி மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. நிலம் மற்றும் சுவர்களில் விரிசல்கள் ஏற்படுதல், மரங்கள், வேலிகள் மற்றும் மின்கம்பங்கள் சாய்தல், திடீரென நீரூற்றுகள் தோன்றல், சேற்று நீர் வெளியேறல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் எச்சரிக்கையாக இருக்குமாறு...

ஐஸ் போதைப் பொருட்களுடன் இருவர் கைது…!

30 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப் பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கல்முனை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவின் தகவலுக்கமைய நீண்ட நாட்களாக ஐஸ் போதைப்பொருட்களை விநியோகம் செய்து வந்த சந்தேக நபர்கள் கல்முனை மாநகரில் உள்ள உல்லாச விடுதி ஒன்றில் வைத்து கைது...

முதலாளியால் தாக்கப்பட்டு தொழிலாளி  ஒருவர் கொலை… !

கொழும்பு , வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றிற்கு அருகில் முதலாளியால் தாக்கப்பட்டு தொழிலாளி  ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு 13 பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய நபரொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது, கொலை செய்யப்பட்டவர் விற்பனை நிலையம் ஒன்றில் தொழிலாளியாக கடமையாற்றி வந்துள்ளார். இந்நிலையில், இந்த...

சந்நிதியான் ஆச்சிரமத்தில் சிறப்பாக இடம் பெற்ற ஆன்மீக  அருளுரை..!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு செல்வச் சந்நிதி ஆலய வருடாந்த பெருந்திருவிழாவின் நாளாந்த நிகழ்வான   13ம் திருவிழாவாகிய  நேற்று வெள்ளிக்கிழமை சந்நிதியான் ஆச்சிரம சைவ கலைபண்பாட்டுப்  பேரவையின் ஆன்மீக அருளுரையினை யாழ் மாவட்ட இளைஞர் சேவை மன்ற உதவிப் பணிப்பாளர் திருமதி வினோதினி  நிகழ்த்தினார்கள். சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் முன்னிலையில் சந்நிதியான் ஆச்சிரம...

நாகபட்டினம் – காங்கேசன்துறை பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை ஆரம்பம்..!

நாகபட்டினத்தில் இருந்து காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை நேற்று  முதல் ஆரம்பமாகியுள்ளது. அந்தவகையில் இந்தியாவின் - நாகபட்டினத்தில் இருந்து நண்பகல் 12 மணியளவில் பயணத்தை ஆரம்பித்த பயணிகள் கப்பல் நேற்று 5 மணியளவில் யாழ்ப்பாணம் - காங்கேசன்துறையை வந்தடைந்தது. இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை கடந்த ஆண்டு ஒக்டோபர் 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட...

புதையல் தோண்டிய  நபரொருவர் கைது!

நெலுக்குளம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட மணிப்புரம் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் புதையல் தோண்டிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் அகழ்வுக்காகப் பயன்படுத்திய பொருட்களுடன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 68 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெலுக்குளம் பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

நாளை முதல் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடும் கிராம சேவகர்கள்…!

நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்கள் திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் (ஓகஸ்ட் 12 மற்றும் 13) கடமைகளில் இருந்து விலகி இருப்பார்களென கிராம உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. அதேசமயம் நாளை முதல் ஒரு வார தொழிற்சங்க போராட்டத்தை கிராமசேவகர்கள் முன்னெடுப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -

Latest News

முன்னாள் கடற்படை தளபதி கரன்னாகொடவுக்கு பிணை

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் இன்று (03,) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஒழிப்பு...