Tuesday, July 14, 2026
No menu items!

News Line

தீயில் முற்றாக எரிந்து சாம்பலாகிய மர ஆலை..!

கொழும்பு - பன்னிபிட்டிய, லியனகொட பிரதேசத்தில் உள்ள மர ஆலையொன்றில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் தீ பரவியதுடன்  தீ விபத்தினால், மரம் அறுக்கும் ஆலை முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது. பிரதேசவாசிகள் மற்றும் நகரசபையின் மூன்று தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தெஹிவளை நகரசபையின் நீர் பீரங்கிகளின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த தீ விபத்து மின்கசிவு...

இளம் பெண் பரிதாபமாக உயிரிழப்பு..!

கந்தளாய் - ரஜ எல  பகுதியில் நேற்று (21) காலை இடம்பெற்ற வாகன விபத்தில்19 வயதுடைய யுவதியே உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியில் பயணித்த  வேன், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி, யுவதி மீது மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் படுகாயமடைந்த யுவதி கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்தார். விபத்தின் பின்னர் சாரதி தப்பிச் சென்றுள்ளதுடன், சந்தேக...

தியத்தலாவை விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7ஆக உயர்வு..!

தியத்தலாவையில் நேற்று  (21)  இடம்பெற்ற ‘Fox Hill Super Cross 2024’ கார் பந்தய விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. விபத்தில் காயமடைந்த மேலும் 20 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்தூவ தெரிவித்தார். பந்தயத்தில் பங்குபற்றிய கார் ஒன்று ஓட்டப் பாதையை விட்டு விலகி கடுப்பாட்டை...

இலங்கை சிறுவன் உலக சாதனை..!

நுவரெலியா - லவ்வர்ஸ் லீஃப் பகுதியை சேர்ந்த 6 வயதான சிறுவன் சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். குறித்த சிறுவன் தமக்கு காண்பிக்கப்பட்ட சகல உடல் உறுப்புக்களின் பெயர்களையும் சரியாக கூறியதுடன் அதிக உடல் உறுப்புக்களின் பெயர்களைக் கூறி, இந்த சாதனையை படைத்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த கலைநேசன் ஹர்சித் என்ற சிறுவனே இந்த சாதனையை...

சிறுமிக்கு மர்மமான முறையில் ஏற்பட்ட கர்ப்பம் ..!

ஹெட்டிபொல பிரதேசத்தில்13 வயது சிறுமி மர்மமான முறையில் கர்ப்பமான சம்பவம் வைத்தியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் வைத்தியர்கள் மற்றும் பொலிஸார் நேற்று விசேட விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். பல நாட்களாக வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட சிறுமி குளியாபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குருநாகல் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மகேஷ் குமாரசிங்க குறிப்பிட்டுள்ளார். மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில் அவர் இரண்டு...

தமிழ் மக்களின் ஆதரவை ரணில் பெறவே முடியாது..!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ராஜபக்ஷக்கள் பக்கம் நிற்கும் வரை அவரால் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத் தமிழ் மக்களின் ஆதரவைப் பெற முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார். இது தொடர்பில்  அவர் மேலும் தெரிவிக்கையில், "நாட்டில் உள்ள வாக்காளர்களில் 40 வீதமானோர் யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லை. 60 சதவீத...

இலங்கையின் மெய்வல்லுனர் ஜாம்பவான் காலமானார்..!

இலங்கையின் முன்னாள் மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் நேற்று தனது 89ஆவது வயதில் அமெரிக்காவில் காலமானார். உயரம் பாய்தல் வீரரான நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் 1952 மற்றும் 1956ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை சார்பாக பங்கேற்றுள்ளார். 1958ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் உயரம் பாய்தலில் புதிய ஆசிய சாதனையை நிறுவியதுடன் தங்கப்பதக்கம்...

‘மகிழ்ச்சியற்ற விடுப்பு’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது “சீனா”

சீனாவில் உள்ள ஒரு வணிக நிறுவனம், ஆரோக்கியமான வேலை, வாழ்க்கை சமநிலையை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு, ஊழியர்களுக்கு ‘மகிழ்ச்சியற்ற விடுப்பு’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. குறித்த நிறுவனம் இந்தப் பிரிவில் உள்ள ஊழியர்களுக்கு ஓரிரு நாட்கள் மட்டும் அல்லாமல் 10 நாட்கள் விடுமுறை அளித்துள்ளது. எல்லோருக்கும் மகிழ்ச்சியற்ற நேரங்கள் இருக்கும், அதனால் நீங்கள் மகிழ்ச்சியாக இல்லை...

போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கடற்படை பிரதானிகள் கைது.!

போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையின் லெப்டினன்ட் கொமாண்டர்கள் 2 பேர் உட்பட 4 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து7.5 மில்லியன் ரூபாய் பெறுமதிமிக்க  510 கிராம் ஐஸ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை, பிறைந்துறைச்சேனை பகுதியில் கத்திக் குத்து- ஒருவர் மரணம்!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதியில் நேற்றைய தினம் (19) இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலில்  நபரொருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபரின் உடல் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், தாக்குதலை மேற்கொண்ட நபரை  கைது செய்ய வாழைச்சேனை பொலிஸார் தீவிர முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
- Advertisement -

Latest News

அதர்வாவின் வெற்றி படமாக மாறும் ‘இதயம் முரளி’

அதர்வாவின் "இதயம் முரளி" திரைப்படம் வெளியாகுவதற்கு முன்னரே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. தற்போது 'இதயம் முரளி' படம் 3 நாட்களில் உலகளவில் இந்திய...