Friday, July 10, 2026
No menu items!

News Line

உத்தேச நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தின் 2 ஆம் வாசிப்பு மீதான விவாதம் இன்று

உத்தேச நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்திற்கு எதிர்ப்புத்  தெரிவித்து சமூக ஆர்வலர்களால் இன்றைய தினம் பாராளும்ன்ற பகுதியில்  ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. உத்தேச நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தை 2 ஆம் வாசிப்பு மீதான விவாதத்துக்கு சபையில் எடுத்துக்கொள்ள வேண்டாமென எதிர்ப்புத் தெரிவித்தே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது மக்களின் பேச்சு சுதந்திரத்தை ஒடுக்குவதாக தெரிவித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்  உத்தேச...

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக மனுத்தாக்கல்

அரசாங்கத்தின் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக  நேற்றையதினம் (22) நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்  செய்யப்பட்டுள்ளது. குறித்த மனுவை, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த ரஞ்சித் மத்துமபண்டார, “உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் எதிர்கட்சிகளுக்கும் ஜனநாயகத்திற்கும் ஆபத்தினை விளைவிக்ககூடியது. மேலும் இந்த சட்டமூலம் நாட்டில் பயங்கரவாதம் நிலவாத ஒரு...

இரு பேருந்துகள் மோதி கோரவிபத்து..!

ஊர்காவற்துறை - குறிகட்டுவானில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த  இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும் தனியார் பேருந்தும் அல்லைப்பிட்டியில்  மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. குறித்த விபத்து இன்று (23.1.2024) காலை 6.30 மணியளவில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் விபத்தில் பலரும் காயமடைந்துள்ள நிலையில்  8 பயணிகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதல்கட்டதகவல்கள் தெரிவிக்கின்றன.

வெற்றி பெற்றது தஜிகிஸ்தான் அணி

2023 ஆம் ஆண்டிற்கான ஆசிய கிண்ண காற்பந்தாட்டத் தொடரின் நேற்றைய தினம் A குழுவின் 2 போட்டிகள் நடைபெற்றிருந்தன. அதில் இரண்டாவது போட்டியில் தஜிகிஸ்தான் மற்றும் லெபனான் ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் தஜிகிஸ்தான் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. தஜிகிஸ்தான் அணி சார்பாக பர்விஷ்டோன் உமர்பயெவ் 80 ஆவது நிமிடத்திலும் நூரித்தீன் கம்ரோகுலொவ் மேலதிக...

வெற்றி பெற்றது கட்டார் அணி

2023 ஆம் ஆண்டிற்கான ஆசிய கிண்ண காற்பந்தாட்டத் தொடரின் நேற்றைய தினம் A குழுவின் 2 போட்டிகள் நடைபெற்றிருந்தன. அதில் முதலாவது போட்டியில் சீனா மற்றும் கட்டார் ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் கட்டார் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. கட்டார் அணி சார்பாக ஹஸ்ஸன் அல் ஹைடஸ் 66 ஆவது நிமிடத்தில் ஒரு...

இன்றும் சில பகுதிகளில் மாலை வேளையில் மழை

சப்ரகமுவ மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை 4.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவும். நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணக்கூடிய சாத்தியம் காணப்படும். சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி...

பிரமாண்ட முறையில் நடந்த அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்

அயோத்தி  ராமர்  கோவில்  கும்பாபிஷேகம் இன்று (22) பிரமாண்டமான  முறையில்  மிகவும்  கோலாகலமாக நிறைவடைந்துள்ளது. பிரதமர்  நரேந்திர  மோடியினால்  சமய  சடங்குகள் செய்யப்பட்டதுடன்  கும்பாபிஷேகம்  நடத்தப்பட்டது. இதையடுத்து  பால  ராமரின்  கண்  திறக்கப்பட்டது. கடந்த  18ஆம்  திகதி  கோவில்  கருவறையில்  5 வயதான  குழந்தை பருவ ராமர் சிலை நிறுவப்பட்டது. இந்த  சிலையே  இன்று  பிரதிஸ்டை  செய்யப்பட்டது. கோயில்  கருவறையில்  உள்ள ...

முதல் வெற்றியை பதிவு செய்த இலங்கை – U19

நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியில் நேற்றைய தினம் நடைபெற்ற போட்டியில் இலங்கை மற்றும் சிம்பாப்வே ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் இலங்கை அணி 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48.3 ஓவர்களில் 204...

இஸ்ரேலை எச்சரித்த ஈரான் ஜனாதிபதி

சிரியாவின் குடியிருப்பு மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எச்சரித்துள்ளார். சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள கட்டிடம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அந்நாட்டில் ஆலோசனைக் கடமைகளில் ஈடுபட்டிருந்த ஈரானிய உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் 5 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாக ஈரானும் சிரியாவும் குற்றஞ்சாட்டி...

யானை தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று (21) மாலை வயலை பாதுகாப்பதற்காகசென்றவரை  யானை தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். 67 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவ இடத்திற்க்கு  திடீர் மரண விசாரனை அதிகாரி எம்.எஸ்.ஷாபி சென்று உயிரிழந்தவரின் சடலத்தை பார்வையிட்டதோடு, இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வான் எல...
- Advertisement -

Latest News

இலங்கையில் ஒட்டிப்பிறந்த குழந்தைகள் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டன!

இலங்கையின் வைத்தியத்துறை வரலாற்றில் ஒட்டிப்பிறந்த 5 வயது இரட்டை குழந்தைகள் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த சாதனை பாராட்டுக்களை பெற்றுவரும் அதேவேளை, நாட்டின் அரச சுகாதார துறையின் திறன்கள்...