Saturday, July 18, 2026
No menu items!

News

பண்டிகை கால பரிசுகள் தொடர்பில் எச்சரிக்கை..!

பண்டிகைக் காலங்களில் பிரபல நிறுவனங்களின் வர்த்தக நாமங்களைப் பயன்படுத்தி சமூக வலைத்தளங்கள் ஊடாக பெரும் மோசடி இடம்பெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பொதுமக்களின் தகவல்களை பெறும் மோசடி சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர பதில் மன்றம் தெரிவித்துள்ளது. மேலும் பெறுமதியான பரிசுகள் வழங்கப்படும் என்று கையடக்கத் தொலைபேசிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி தரவுகள் பெறப்படுவதாக அதன்...

வவுனியாவில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் பலி..!

நேற்று மாலை வவுனியா ஓமந்தையில் ஏற்பட்ட கோர விபத்தில்  முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அகிலேந்திரன் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தானது டிப்பர்வாகனமும் கப்வாகனமும் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வைத்தியர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று இரவு 7.00மணியளவில்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பிற்பகல் 2.00 மணிக்கு பின் பலத்த மழை ..!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய மேல், தென், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேநேரம் கிழக்கு மாகாணத்தில் பல...

ஜனாதிபதி தேர்தல் திகதி வெளியானது..!

திட்டமிட்டபடி அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதற்கமைய எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் வரும் சனிக்கிழமை தேர்தல் நடைபெறும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் அண்மையில் நியமிக்கப்பட்ட தனது அரசியல் அமைச்சரவைக்கும் ஜனாதிபதி இந்த விடயத்தை அறிவித்துள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை,...

GT ஐ வீழ்த்திய CSK..!

நடைபெற்றுவரும் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை சுப்பர் கிங்க்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் சென்னை சுப்பர் கிங்க்ஸ் அணி 63 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில்...

அமெரிக்காவில் கப்பலில் ஏற்பட்ட மாற்றங்கள்..!

அமெரிக்காவின் பால்டிமோர் நகருக்கு அருகிலுள்ள பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தின் மீது கொழும்பு நோக்கி புறப்பட்ட கொள்கலன் கப்பல் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து அமெரிக்க நேரத்தின்படி நேற்று அதிகாலை 01:25 மணியளவில் சம்பவித்தது. அமெரிக்காவின் பால்டிமோர் துறைமுகத்திலிருந்து அதிகாலை 12:24 மணிக்கு கொழும்பு நோக்கி டாலி என்ற கப்பல் புறப்பட்டது.  கப்பல் புறப்பட்டு சுமார் ஒருமணித்தியாலத்தின் பின்...

போதையில் வந்த ஆசிரியர் – செருப்பால் அடித்த மாணவர்கள்..!

இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் ஒருவர் வெளியேற்றப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறித்த ஆசிரியர் தினமும் குடித்துவிட்டு பாடசாலைக்கு வரும் அந்த ஆசிரியர் குழந்தைகளுக்கு பாடம் நடத்தாமல் தரையில் படுத்துத் தூங்கியுள்ளதாகவும்  தகாத வார்த்தை பேசுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்  குழந்தைகள் பாடம் சம்பந்தமாக ஏதாவது சந்தேகம் கேட்டால், அவர்களை...

சீனாவுக்கும் இலங்கைக்கும் புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து..!

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஒன்பது புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஒப்பந்தங்கள் இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் சீன பிரதமர் லீ கியாங் தலைமையில் நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளன. சீனாவின் தியானன்மென் சதுக்கத்தில் உள்ள மக்கள் மாவீரர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிரதமர், இராணுவ மரியாதையை பெற்றுக்கொண்டதன் பின்னர் இருதரப்பு கலந்துரையாடல் இடம்பெற்றது. மேலும், கைச்சாத்திடப்பட்ட ஒன்பது...

உயிர் வாழ வைத்த யுவதி இலங்கையில் நெகிழ்ச்சிச் சம்பவம்..!

அனுராதபுரத்தில் சியம்பலகஸ்வெவ, ரம்பேவ, பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய உபேக்ஷா சந்தமாலி எனும் யுவதி வாகன விபத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளம் யுவதி உயிரிழந்த நிலையில் அவரின் உடல் பாகங்கள் தானம் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் அவரின்  கண்கள், கல்லீரல், சிறுநீரகம் என்பன தானமாக வழங்கப்பட்டுள்ளன. பிரபலமான சுப்பர் மார்க்கெட் சங்கிலியின் அனுராதபுர...

துப்பாக்கிச் சூட்டில் இருவர் தப்பியோட்டம்..!

நாரம்மல பகுதியில் கொள்ளையர்கள் குழு மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இரு கொள்ளையர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆப்பிள் ஐபோன் விற்பனை தொடர்பில் பத்திரிகையில் வெளியிட்ட விளம்பரங்களை அடுத்து கையடக்க தொலைபேசிகளை கொள்வனவு செய்ய வந்தவர்களிடம் இருந்து கொள்ளையர்கள் பணத்தை திருட முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விளம்பரத்தைப்...
- Advertisement -

Latest News

பெண் பொலிஸ் கொன்ஸ்டபிளின் மடியில் அமர முயன்ற அதிகாரி பணியிடை நீக்கம்

மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்தின் பெண் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவரின் மடியில் அமர முயன்ற பொலிஸ் கொன்ஸ்டபிளை பணியிடை நீக்கம் செய்ய இன்று (17) பொலிஸார் நடவடிக்கை...