Monday, July 13, 2026
No menu items!

Updates

இறுதிப்போட்டிக்கு முன்னேறிய RCB

நடைபெற்று வரும் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்றைய தினம் வெளியேற்றல் போட்டி நடைபெற்றிருந்தது. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) மற்றும் ரோயல் செலஞர்ஸ் பெங்களூர் (Royal Challengers Bangalore) ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் பெங்களூர் அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூர் முதலில் துடுப்பெடுத்தாடி...

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தகவல்..!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் வேட்பாளர் யார் என்பது விரைவில் தீர்மானிக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர் யார் என்பது உறுதிபட அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பலரும் பல்வேறு கருத்துக்களையும் விமர்சனங்களையும் வெளியிட்டு வருகின்ற போதிலும் கட்சியின் இறுதித் தீர்மானம் அதிகாரபூர்வமாக எடுக்கப்படவில்லை என...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பதற்றம்..!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று(15) அதிகாலை 65 வயதுடைய வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். CX 610 என்ற விமானத்தில் ஹொங்காங்கில் இருந்து இன்று அதிகாலை 1.30 மணியளவில் இலங்கை வந்த வெளிநாட்டு பயணி ஒருவருக்கு விமான நிலையத்தில் திடீர் சுகவீனம் ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து உடனடியாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது பயணி ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுளது.

35,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு எலுமிச்சம்பழம்.!

தமிழ்நாட்டின் ஈரோடில் உள்ள தனியார் கோயிலொன்றில் ஒரு எலுமிச்சம்பழம் 35,000 ருபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. அதாவது மகாசிவராத்திரயின் போது சிவபுரி கிராமத்துக்கு அருகே பழம் பூசைய்யன் கோயிலில் அந்த எலுமிச்சை உள்ளிட்ட மேலும் சில பொருள்கள் சிவனுக்கு படைக்கப்பட்டது. சுமார் 15 பக்தர்கள் ஏலத்தில் கலந்துகொண்டனர். கடைசியில் ஈரோட்டைச் சேர்ந்த பக்தர் ஒருவர் அதனை ஏலத்தில் எடுத்துள்ளார். ஏலத்தில்...

மொடலிங் மோகத்தால் நிர்வாண புகைப்படங்கள்  ஏமாந்த பெண்கள் ; சிக்கிய நபர்

கண்டி - இராஜவெல்ல பகுதியில் மொடலிங் துறைக்கு பெண்களை இணைத்துக் கொள்வதாகத் தனது முகநூல் பக்கத்தில் விளம்பரம் செய்த சந்தேக நபர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு நேற்று(14)  கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். சந்தேக நபர் தன்னை ஒரு வைத்தியராகக் காட்டிக்கொண்டு இளம் பெண்களை மொடலிங் துறைக்கு வேலைக்குச் சேர்த்துக் கொள்வதாகக்...

கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட பெண்..!

சீதுவ, முத்துவடிய பிரதேசத்தில் உள்ள வாடகை அறை ஒன்றிற்க்குள் கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. 26 வயதுடைய பெண் ஒருவரின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருமணமாகாத இளைஞருடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, குறித்த இளைஞன் போத்தல் மூடியினால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. மேலும் சந்தேக...

மீண்டும் யாழிற்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 22ஆம் திகதி யாழிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். யாழ்ப்பாணம் மத்திய தபால் நிலையத்தில் உணவுப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கும் பிரிவை திறந்து வைக்கும் நிகழ்விலும் ஜனாதிபதி பங்குபற்றவுள்ளார். உணவுப் பண்டங்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யவோ அல்லது இறக்குமதி செய்யவோ அனுமதி பெற இதுவரை வடக்கு மாகாணத்தை...

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் விருது 2023

2023 ஆம் ஆண்டிற்கான பாலின சமத்துவம், பன்மைத்துவம் மற்றும் உள்ளடக்கிய சம்பியனுக்கான சர்வதேச ஒலிம்பிக் குழுவின் விருதுகளை பெறுபவர்களின் பெயர்ப்பட்டியல் வெளியானது. ஆபிரிக்கா, அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா மற்றும் ஓசியானியா ஆகிய நாடுகளுக்கு தலா ஒரு விருது வீதமும் உலக அளவில் ஒரு விருது வீதமும் வழங்கப்படுகின்றது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டிற்கான உலக விருதுக்கு...

பூமியை பாதுகாப்பதே முக்கியம்: பராக் ஒபாமா

செவ்வாய் கிரகத்தில் குடியேறுவதை விட, நாம் வாழும் பூமியை பாதுகாப்பதே முக்கியம் என பாரிஸ் உச்சி மாநாட்டில் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். செவ்வாய் கிரகத்தில் குடியேற வேண்டும் என்பதற்கான முனைப்பைவிட, மனிதகுலம் வாழத்தக்கதாக பூமியை தொடர்ந்து பாதுகாக்க வேண்டும். ஏனெனில் அணுசக்தி யுத்தம் மற்றும் காலநிலை மாற்றம் போன்றவைக்கு பின்னரும், செவ்வாய் கிரகத்தை விட சிறப்பான வாழிடத்தை...

சிறுமியை தகாதமுறைக்கு உட்படுத்திய இளைஞன்..!

மட்டக்களப்பு வாகரையில் 7 வயது சிறுமி ஒருவரை தகாதமுறைக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 சிறுவர் உட்பட 5 பேரில் 4 சிறுவர்களையும் பிணையில் விடுவித்ததுடன் 18 வயதுயை ஒருவரை எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை நீதவான் நீதிமன்றம்  நேற்று(14) உத்தரவிட்டுள்ளது. வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் கணவனை இழந்த...
- Advertisement -

Latest News

அதர்வாவின் வெற்றி படமாக மாறும் ‘இதயம் முரளி’

அதர்வாவின் "இதயம் முரளி" திரைப்படம் வெளியாகுவதற்கு முன்னரே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. தற்போது 'இதயம் முரளி' படம் 3 நாட்களில் உலகளவில் இந்திய...