தனிப்பட்ட வணிக முடிவுகள் குறித்து சாட் ஜிபிடி இடம் கேட்கக் கூடாது. இது பிரைவசிக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.
காலை முதல் இரவு தூங்கும் வரை நமக்குத் தேவையான தகவல்களை இந்தச் செயற்கை நுண்ணறிவுத் தளமான சாட் ஜிபிடி வழங்கி வருகிறது.
இருப்பினும், சில தகவல்கள் சாட் ஜிபிடி இடம் கேட்கக் கூடாது என்றும், அத்தகைய தகவல்கள் சரியானதாக இருக்காது என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள். அவை குறித்துப் பார்க்கலாம்.
மருத்துவ ரீதியிலான தகவல்களை சாட் ஜிபிடி -இடம் கேட்பதைத் தவிர்க்க வேண்டும். இது போன்ற தகவல்களைக் கேட்கும் போது சாட் ஜிபிடி தன்னை ஒரு ஊதியம் பெறாத டாக்டராக உணர்கிறது.
இது ஆபத்தான வழிக்குக் கேட்பவரைக் கொண்டு செல்லவும் வாய்ப்பு உள்ளது.
எதிர்காலத்தைக் கணிப்பது குறித்தும் கேட்கக் கூடாது என்கிறார்கள்.
உதாரணத்திற்கு, அடுத்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார், 10 ஆண்டுகளுக்குப் பிறகு நான் என்னவாக இருப்பேன் என்பது போன்ற கேள்விகளைத் தவிர்க்க வேண்டும். இதற்குச் சரியான பதில் கிடைக்காது.
தனிப்பட்ட தகவல்களை சாட் ஜிபிடி இடம் வழங்கக் கூடாது. அவ்வாறு வழங்கப்படும் போது தங்களது பாஸ்வேர்ட், வங்கிக் கணக்குகள் போன்றவற்றை யூசர்கள் இழப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன.
அந்த வகையில் நீங்கள் சாட் ஜிபிடி முழுமையாக நம்பிவிடக் கூடாது என்கிறார்கள் நிபுணர்கள்.
சாட் ஜிபிடி-யின் பயிற்சித் தரவுகள் கட் ஆஃப் தேதியைக் கொண்டுள்ளன. அதாவது, ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பின்னால் நடந்த நிகழ்வு அல்லது மிகவும் லேட்டஸ்டான தகவல்களை சாட் ஜிபிடி அணுக முடியாது.
உதாரணத்திற்கு, வானிலை அறிவிப்புகள், பங்குச்சந்தை லேட்டஸ்ட் நிலவரங்களைக் கேட்கும் போது அது முழுமையற்ற பதிலைத் தர வாய்ப்புள்ளது.
தனிப்பட்ட வணிக முடிவுகள் குறித்து சாட் ஜிபிடி இடம் கேட்கக் கூடாது. இது பிரைவசிக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே, இது போன்ற கேள்விகளை சாட் ஜிபிடி இடம் கேட்பதைத் தவிர்ப்பது நல்லது என நிபுணர்கள் கூறுகிறார்கள்.








