கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த 2006ம் ஆண்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டது தொடர்பாக குற்றப் புலனாய்வு (சிஜடி) பிரிவினரால் வியாழக்கிழமை (19.12.2024) கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் அழைக்கப்பட்டார்.

கடந்த 2006ம் ஆண்டு டிசம்பர் 15 ம் திகதி கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கொழும்பில் இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கம் கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு மட்டக்களப்பு நோக்கி திரும்பிக் கொண்டிருந்தபோது இனம் தெரியாத ஆயுதாரிகளால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக சிஜடி யினர் விசாரணை மேற்கொண்டுவரும் நிலையில் கருணா அம்மானை சிஜடியினர் விசாரணைக்கு அழைத்ததையிட்டு அவர் இன்று கொழும்பிலுள்ள சிஜடிக்கு சென்று வாக்குமூலங்களை வழங்கிவிட்டு வெளியேறியுள்ளார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கருணா அம்மான் தன்னிடம் உபவேந்தர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டது தொடர்பாக விசாரணைகள்  தொடர்பாகவாக்கு மூலம் அளித்துள்ளதாக தெரிவித்தார்.

[மட்டக்களப்பு நிருபர் – கனகராசா சரவணன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here