Sunday, June 7, 2026
No menu items!

#srilanka#

ஜிம்மி கார்ட்டரின் மறைவிற்கு ஜனாதிபதி ஆழ்ந்த இரங்கல்..!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டரின் மறைவிற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார். சமாதானம், மனித உரிமைகள் மனிதாபிமான விவகாரங்கள் குறித்த அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பினால் அவரது அசாதாரண வாழ்க்கை வரையறுக்கப்பட்ட ஒரு அரசியல்வாதி அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி என அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். சர்வதேச அமைதியை ஊக்குவிக்கும் ஜிம்மி கார்ட்டரின்...

சூட்சுமமான முறையில் போதை மாத்திரை விற்பனை – சந்தேகநபர்கள் மடக்கி பிடிப்பு..!

மாவனெல்லை பிரதேசத்தில் பெருந்தொகையான போதை மாத்திரைகளுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவனெல்லை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் மூவரும் மாவனெல்லை ஹிந்தெனிய மயானத்திற்கு அருகில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது 8 ஆயிரத்து 100 போதை மாத்திரைகள், சந்தேகநபர்கள் வந்த வேன் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கைது...

தம்பதியினர் மீது துப்பாக்கிச் சூடு – கணவன் உயிரிழப்பு..!

வெல்லவ - மரலுவாவ பிரதேசத்தில் வீடொன்றில் இருந்த கணவன் மனைவி மீது இனந்தெரியாத ஒருவர் நேற்று (24.12.2024) இரவு துப்பாக்கி சூட்டை மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த கணவனும் மனைவியும் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கணவன் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மரலுவாவ பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். காயமடைந்தவர்...

நாட்டில் நிலவும் மருந்தாளர்களுக்கான வெற்றிடம்..!

மருந்தாளர்களுக்கான வெற்றிடம் நிலவுவதாக தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் கொழும்பு மாவட்டத் தலைவர் ஹேமந்த விஜேசேகர இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் சட்ட ரீதியாக மருந்தகங்களை முன்கொண்டு நடத்துவதற்கு பாரியளவில் மருந்தாளர்களுக்கான வெற்றிடம் நிலவுகின்றது. அந்த நெருக்கடிக்குத் தீர்வுகாணும் வகையில் கூடிய விரைவில் மருந்தாளர்களை உள்ளீர்ப்பதற்கான செயற்றிட்டத்தை...

விவசாயிகளுக்கு இழப்பீடு..!

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட நெல், சோளம், உருளைக்கிழங்கு, பெரிய வெங்காய உற்பத்தியாளர்களுக்கு ஹெக்டயருக்கு தலா ஒரு இலட்சம் இழப்பீட்டை வழங்க தீர்மானத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை (24.12.2024) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்துள்ளார்.

மஹிந்தவின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் – புதிய அரசே பொறுப்பு..!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள முப்படையினரும் நேற்று (23.12.2024) முதல் நீக்கப்பட்டுள்ளதன் மூலம் அவரின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அதற்கு தற்போதைய அரசாங்கமே முழுப்பொறுப்பேற்க வேண்டுமென சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். அண்மையில் அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தின்படி, முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு பணிகளில் இருந்து முப்படையினர் நேற்று திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரும்...

இலஞ்சம் பெற்ற போது கையும் களவுமாக சிக்கிய பொலிஸ் சார்ஜன்ட்..!

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவின் சார்ஜன்ட் ஒருவர் பணப் பிரச்சினையை தீர்ப்பதற்காக முறைப்பாட்டாளரிடம் இருந்து 5000 ரூபாவை இலஞ்சமாகப் பெற்ற போது கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேகநபர் திருகோணமலை பொலிஸ் தலைமையகத்தின் பல்வேறு முறைப்பாடுகள் பிரிவில் கடமையாற்றியவர் என்பதுடன், 5000 ரூபா இலஞ்சம் கோரியுள்ளார். சந்தேகத்திற்குரிய சார்ஜன்ட் திருகோணமலை பொலிஸ் தலைமையகத்தின்...

பிணையில் விடுவிக்கப்பட்ட குடு சலிந்துக்கு பிடியாணை..!

பிணையில் விடுவிக்கப்பட்ட குடு சலிந்து எனப்படும் சலிந்து மல்ஷிக குணரத்னவை கைது செய்யுமாறு பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகாத காரணத்தால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிணையில் விடுவிக்கப்பட்ட அவர் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாக வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. எனினும், அவர் அந்த நிபந்தனையை மீறிச் செயற்பட்டுள்ளதாக பாணந்துறை நீதவான்...

சீன ஆய்வு கப்பல்களுக்கு இலங்கையில் அனுமதி..!

இலங்கை வரும் சீன கப்பல்களுக்கு திட்டமிடப்பட்ட பொறிமுறைமையின் அடிப்படையில் அனுமதி வழங்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர்கள் சந்திப்பில் நேற்று பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்படி, இந்த வார இறுதியில் சீனாவில் இருந்து மருத்துவ கப்பல் ஒன்று வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை...

விக்னேஸ்வரனின் நிலமையே அர்ச்சுனாவுக்கும் – கடுமையாக சாடும் அருள் ஜெயேந்திரன்..!

அரசியலில் விக்னேஸ்வரனுக்கு ஏற்பட்ட நிலைமையே வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் ஏற்படும் என அகில இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சியின் தலைவர் அருள் ஜெயேந்திரன் தெரிவித்தார். சமகால நிலைமைகள் தொடர்பாக யாழ் ஊடக அமையத்தில் நேற்று (20.12.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், சாவகச்சேரி வைத்தியசாலை பிரச்சனையை பயன்படுத்தி பாராளுமன்ற உறுப்பினராகியுள்ளார்....
- Advertisement -spot_img

Latest News

யாழில் 220 கிலோ கேரள கஞ்சா கண்டெடுப்பு!

யாழ்ப்பாணத்தின் அந்தணிபுரம் பகுதியில் 220 கிலோ எடையுள்ள 102 கேரள கஞ்சா பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உளவுத்துறை தகவலுக்கமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இன்று (07)...
- Advertisement -spot_img