வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு Global Max Networks (Pvt) Ltd மற்றும் வெற்றி ரீவி ஊடக நிறுவனத்தினால் சமைத்த உணவுகள் மற்றும் உலர்உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இதன், முதற்கட்டமாக வெள்ளம் ஏற்பட்ட முதல்நாள் அன்று மன்னார் மாவட்டத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட கொன்னையன் குடியிருப்பு, ஜோசவாஸ் நகர், ஜிம்ரோ நகர் ஆகிய பகுதிகளுக்கு இரவு உணவு வழங்கி வைக்கப்பட்டன.

Global Max Networks (Pvt) Ltd. நிறுவனத்தின் நிதி பங்களிப்புடன் சமூக செயற்பாட்டாளர் மரியசீலன் மூலம் இவ்வாறு இடைத்தங்கல் முகாமில் தங்கியிருந்த 200 இற்கும் மேற்பட்டவர்களுக்கு இரவு உணவு வழங்கி வைக்கப்பட்டது.

அதே போன்று வவுனியாவின் ஓமந்தை மரையறுத்தகுளம் பகுதியில் கடந்த நவம்பர் மாதம் 29 ஆம் திகதி இடைத்தங்கல் முகாமில் தங்கியிருந்த 100 இற்கும் மேற்பட்டவர்களுக்கு மதிய உணவு வழங்கி வைக்கப்பட்டன.

மேலும் ஓமந்தை, வேப்பங்குளம் பகுதியில் வெள்ள அனர்த்ததிற்குட்பட்டு வீடுகளில் முடங்கியிருந்த 200 இற்கும் மேற்பட்டோருக்கு இரவு நேர உணவு வழங்கி வைக்கப்பட்டன.

கிராம சேவகர் அனுஷியா செல்வராஜாவின் வேண்டுகோளிற்கிணங்க சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் சு. ரைஸ்டீன் அவரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றிருந்தது.

குறித்த நிகழ்வுகளில் Global Max Networks (Pvt) Ltd. நிறுவனத்தின் தலைவரும் பணிப்பாளருமான          திரு. ச. சுரேந்திரன் ( சுரேந்த் ), அவரின் பாரியார் திருமதி. சு. லாவண்யா மற்றும் நிறுவனத்தின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Global Max Networks (Pvt) Ltd. நிறுவனமானது இரண்டு வருடங்களை பூர்த்தி செய்துள்ள நிலையில் மக்களுக்கு  பல்வேறு சேவைகளை ஆற்றி வருகின்றது.

குறிப்பாக கடந்து வருடம் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் போது கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா போன்ற பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சென்று பார்வையிட்டு உலர் உணவுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.

அத்தோடு வெயில் காலங்களில் நீர்த்தாகத்தை தீர்ப்பதற்காக Global Max Networks (Pvt) Ltd. நிறுவனத்திற்கு அருகில் குளிர்பானங்கள் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன.

மேலும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக ஆசிகுளம் பகுதியில் பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டிருந்தன.

அத்துடன் சமூகத்தில் அவ்வப்போது ஏற்படுகின்ற பொது நலம் சார்ந்த தேவைகளுக்காக நிறுவனத்தின் இயக்குனர் திரு. ச. சுரேந்திரன் ( சுரேந்த் ) அவர்களின் எண்ணக்கருவுக்கு அமைவாக பல்வேறு உதவி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

youtube placeholder image

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here