ஒன்பிளஸ் நிறுவனம் அதன் அடுத்த தலைமுறை ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 15 5ஜி-யின் உலகளாவிய அறிமுகத்தை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் முதலில் சீனாவில் அக்டோபரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது, அதைத் தொடர்ந்து விரைவில் உலகளாவிய அறிமுகம் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இந்த ஃபிளாக்ஷிப்போனின் ‘சாண்ட் ஸ்டார்ம்’ வண்ண வகையிலான வடிவமைப்பை நிறுவனம் வெளியிட்டுள்ளது, இது ஒரு பிரீமியம் தோற்றத்தை அளிக்கிறது.
ஒன்பிளஸ் 15 ஆனது அலுமினிய பிரேம் (Aluminium frame) வர உள்ளது. இது தொழில்துறையிலே முதன்முறையாகக் கருதப்படும் மைக்ரோ-ஆர்க் ஆக்சிடேஷன் (micro-arc oxidation) அளிக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் டிசைன் செய்யப்பட்ட கேமரா மாட்யூல் மற்றும் பல ஷார்ட்கட் செயல்பாடுகளை நிர்வகிக்கக்கூடிய புதிய ‘பிளஸ் கீ’ (Plus key) ஒன்றும் உள்ளது.
புதிய வடிவமைப்பைத் தவிர, ஒன்பிளஸ் 15 ஆனது Snapdragon 8 Elite Gen 5 செயலி மூலம் இயக்கப்படும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இது புதிய குளிரூட்டும் அமைப்புடன் (Cooling System) வருகிறது, இது தற்போதைய மாடலை விட மேம்பட்ட செயல்திறனை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்பிளஸ் 15 5G இந்தியாவில் சுமார் ரூ.70,000 முதல் ரூ.75,000 வரையிலான விலையில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.







