வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதையடுத்து, 2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஓகஸ்ட் மாதம் வரையிலான 8 மாதங்களில் இலங்கை அரசாங்கம் 1,007.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இந்த தகவல், மத்திய வங்கி வெளியிட்டுள்ள 2025 ஓகஸ்ட் மாதத்திற்கான வெளிநாட்டு பரிவர்த்தனை செயல்திறன் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
ஓகஸ்ட் மாதம் மட்டும் 255.7 மில்லியன் டொலர் செலவழிக்கப்பட்டுள்ளது, இது இந்த வருடத்தில் அதிகபட்ச வாகன இறக்குமதி செலவாக பதிவாகியுள்ளது.
மேலும் 8 மாதங்களில் வாகன இறக்குமதிக்கான மாதாந்திர செலவு ,
ஜனவரி – 29.1
பிப்ரவரி – 22.3
மார்ச் – 54.0
ஏப்ரல் – 145.6
மே – 125.2
ஜூன் – 169.6
ஜூலை – 206.0
ஆகஸ்ட் – 255.7








