நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அனுராதபுரத்தில் காவல்துறையினரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, யாழ்ப்பாணத்தில் வைத்து விசேட காவல்துறை குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார் .
இதேவேளை அவரை அனுராதபுரம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.








