கறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகம் அமைந்துள்ள கொழும்பு பிரதான வீதியில் தனியார் பஸ் ஒன்றின் மீது யானை தாக்கிய சம்பவமொன்று நேற்றிரவு (28) இடம்பெற்றுள்ளது.

திருகோணமலையிலிருந்து கல்முனை நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் மீதே யானை ஒன்று இவ்வாறு தாக்கியுள்ளது.

இத்தாக்குதலில் பஸ்ஸின் முன் பகுதி சேதமடைந்துள்ளது.

சில நாட்களாக மக்கள் குடியிருப்புப் பகுதிக்குள் மூன்று யானைகள் உட்புகுந்து அட்டாகசம் செய்து வருவதால் அப்பகுதி மக்கள் தினந்தோறும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

குடியிருப்பு பகுதிக்குள் உட்புகுந்துள்ள யானைகளை காட்டுப் பகுதிக்குள் விரட்டும் முயற்சிகளை கல்குடா அனர்த்த அவசர சேவைகள் உறுப்பினர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here