அஜித்தின் மனைவி- ஷாலினி திடீர் என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில், அனைவரும் பார்த்து பொறாமை படும் ஜோடி தான் அஜித் – ஷாலினி.
இவர்களுக்கு அனோஷ்கா என்கிற மகளும், ஆத்விக் என்கிற மகனும் உள்ளனர்.
ஆரம்பத்தில் ஷாலினி இவரின் காதலை ஏற்றுக்கொள்ள தயக்கம் காட்டினாலும் பின்னர் காதலை ஏற்றுக்கொண்டார்.
பின்னர் பெற்றோர்கள் சம்மதத்துடன், திருமணமும் செய்துக் கொண்டனர்.
திருமணத்திற்கு பின்னர் மீடியா பக்கம் வராமல் ஒதுங்கி இருந்த சாலினி கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் இன்ஸ்டாகிராம் கணக்கு துவங்கி அடிக்கடி தன்னுடைய குடும்பத்துடன் எடுக்கும் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்த நிலையில், நடிகை ஷாலினிக்கு உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் மருத்துவரின் அறிவுரை படி சாலினிக்கு ஆப்ரேஷன் செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கணவர் – அஜித் விடாமுயற்சி படப்பிடிப்பில் இருப்பதால் ஆப்ரேஷன் செய்யும் போது பக்கத்தில் இல்லை. மாறாக மனைவிக்கு அனைத்து விடயங்களை முன்கூட்டியே செய்து வைத்து விட்டு தான் அஜர்பைஜான் நாட்டிற்கு சென்றுள்ளார்.
விடாமுயற்சியின் படபிடிப்பு சிறப்பாக முடிந்த நிலையில் மனைவி – சாலினியை பார்ப்பதற்கு அஜித் சென்னை விரைந்துள்ளதாக கூறப்படுகின்றது.