Wednesday, June 24, 2026
No menu items!

டொனால்ட் ட்ரம்ப்

பாப்பரசர் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் ட்ரம்ப் பங்கேற்கவுள்ளதாக தகவல்..!

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான பாப்பரசர் பிரான்சிஸ் கடந்த 21ஆம் திகதி நித்திய இளைப்பாறினார். பாப்பரசர் பிரான்சிஸின்  மறைவுக்கு உலகத்தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாப்பரசரின்  இறுதிச்சடங்கு 26ஆம் திகதி நடைபெற உள்ளது. இத்தாலியின் ரோம் நகரில் உள்ள புனித பீட்டர் தேவாலயத்தில் பாப்பரசர் பிரான்சிஸின்  உடல் வைக்கப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. அதன்பின்னர், உலக நாடுகளின்  தலைவர்கள், பொதுமக்கள்...

பாப்பரசர் பிரான்சிஸின் மறைவிற்கு ட்ரம்ப் இரங்கல்!

மறைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸை நினைவுகூரும் வகையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். “பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களுக்கு அமைதி உண்டாகட்டும்! கடவுள் அவரையும் அவரை நேசித்த அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!” என்று ட்ரம்ப் தனது சமூக ஊடக வலைத்தளமான ட்ரூத் சோஷியலில் ஒரு சுருக்கமான அறிக்கையை வெளியிட்டு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். பாப்பரசரின் மறைவைத் தொடர்ந்து ட்ரம்ப் அவரை நினைவு கூர்ந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ட்ரம்பின் வரிகளிலிருந்து விடுவிக்குமாறு ஐ.நா கோரிய நாடுகளின் பட்டியலில் இலங்கை இல்லை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த தீர்வை வரிகளிலிருந்து உலகின் வறுமையான மற்றும் சிறிய நாடுகளை விடுவிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை அமெரிக்கா ஜனாதிபதியிடம் கேட்டுக் கொண்டுள்ளது. இவ்வாறு அமெரிக்க வரி முறையிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என 28 வறுமையான மற்றும் சிறிய நாடுகளின் பெயர் பட்டியலை ஐக்கிய நாடுகள் சபை வழங்கியுள்ளது. அத்துடன் அந்த நாடுகள்...

30 நாடுகளிலுள்ள தூதரகங்களை மூடுவதற்கு டொனால்ட் ட்ரம்ப் நடவடிக்கை!

30 நாடுகளிலுள்ள தூதரகங்கள் மற்றும் துணைத்தூதரங்களை மூடுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார். அமெரிக்க அரசாங்கத்தின் தேவையற்ற செலவுகளைக் குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவற்றுள் 10 தூதரகங்கள் மற்றும் 17 துணைத்தூதரகங்கள் அடங்குகின்றன. ஐரோப்பா, ஆபிரிக்கா மற்றும் ஆசியாவில் உள்ள சில தூதரகங்களும் இதில் அடங்குவதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சோமாலியா, ஈராக், மோல்டா...

சீனா மீதான வரியை 145 சதவீதமாக உயர்த்தியது அமெரிக்கா..!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரிகளை மொத்தம் 145 சதவீதமாக உயர்த்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னர் அறிவிக்கப்பட்ட 125 சதவீதத்தை விட இது அதிகம் என வெள்ளை மாளிகை தெளிவுபடுத்தியுள்ளது. ட்ரம்ப் சுமார் 60 நாடுகள் மீதான தனது "தீர்வை வரிகளை" 90 நாள் இடைநிறுத்துவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா – சீனா வர்த்தக போர் தீவிரமடையும் : பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை!

சீனாவுக்கு எதிரான வரி உடனடியாக அமுலுக்கு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். தமது உத்தியோகபூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் இதனைப் பதிவிட்டுள்ள அவர், எதிர்காலத்தில் சீனா, அமெரிக்காவின் நிலைப்பாடு ஏற்றுக் கொள்ளத்தக்கவை என்று உணரும் எனத் தாம் நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, உலகளாவிய வீழ்ச்சியின் காரணமாக தங்களின் கொள்கையில் மாற்றம் ஏற்படவில்லை என அமெரிக்க...

டொனால்ட் ட்ரம்ப் சீனாவுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

அமெரிக்கப் பொருட்களுக்குச் சீனாவினால் விதிக்கப்பட்ட வரி நீக்கப்படாத பட்சத்தில், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மேலதிகமாக 50 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். வெள்ளை மாளிகையில் நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அமெரிக்க ஜனாதிபதி, ஏனைய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி புதிய வரிகளை நீக்குவது குறித்து தாம்...

கடுமையான சரிவை நோக்கி உலக பங்குச்சந்தை..!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஏப்ரல் 2ஆம் திகதி அமெரிக்க பொருட்களுக்கு பிற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப பரஸ்பர வரியை விதிப்பதாக அறிவித்தார். ட்ரம்பின் வரிவிதிப்புக்கு எதிராக உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. சீனா ட்ரம்பின் வரிவிதிப்புக்கு எதிர் வரிவிதிப்பு நடவடிக்கையாக அமெரிக்க பொருட்களுக்கு 34 சதவீத கூடுதல் வரி விதித்தது. ட்ரம்ப்...

டிரம்ப்பின் வரிவிதிப்பால் வெகுவாக சரிந்த பணக்காரர்களின் சொத்துமதிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஏப்ரல் 2 ஆம் திகதி அமெரிக்க பொருட்களுக்கு பிற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப பரஸ்பர வரியை விதிப்பதாக அறிவித்தார். இதற்கு உலக நாடுகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. உலகெங்கிலும் பங்குச் சந்தையும் ட்ரம்ப் அறிவிப்பால் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. அதன்படி, இலங்கை பொருட்களுக்கு 44 சதவீத வரி...

இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரியை விதித்த அமெரிக்கா!

உலகெங்கிலும் உள்ள நாடுகள் மீது வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதில் இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 44% வரியும் அடங்கும். அமெரிக்காவால் ஆசிய நாடுகளில் அதிக வரி விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை நான்காவது இடத்தில் உள்ளது. 2024 ஆம் ஆண்டில், அமெரிக்கா இலங்கையிலிருந்து 3 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பொருட்களை இறக்குமதி...
- Advertisement -spot_img

Latest News

பெண் இயன் மருத்துவரின் சடலம்; பிரதான சந்தேக நபர்கள் யாழில் கைது!

தெல்தெனிய பகுதியில் கைவிடப்பட்டிருந்த காரொன்றிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் என நம்பப்படும் நபர் மற்றும் அவரது மனைவி குழந்தை ஆகியோர்...
- Advertisement -spot_img