Saturday, May 30, 2026
No menu items!

ரணில் விக்ரமசிங்க

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்  வெளிநாட்டு பயணங்கள் தொடர்பில் நளிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்டுள்ள தகவல்!

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2022 முதல் 2024 வரை 23 வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக 1.27 பில்லியன் ரூபா செலவிட்டுள்ளதாக நளிந்த ஜயதிஸ்ஸ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி 2022ஆம் ஆண்டு 4 சுற்றுப்பயணங்களும் 2023ஆம்...

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரதான பாதுகாப்பு அதிகாரிக்கு இடமாற்றம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரதான பாதுகாப்பு அதிகாரியை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்ய காவல்துறை தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, முன்னாள் ஜனாதிபதியின் தலைமை பாதுகாப்பு அதிகாரியான தலைமை ஆய்வாளர் அசோக ஆரியவன்ச, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் காங்கேசன்துறை காவல்துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த இடமாற்றம் இன்று (01) முதல் அமுலுக்கு...

சற்றுமுன் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்..!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாக்குமூலங்களை வழங்கிய பின்னர் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிலிருந்து சற்று முன்னர் வெளியேறினார். நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது செய்யப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று காலை கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.

சற்றுமுன் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான ரணில்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (28) காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க ஊவா மாகாண முதலமைச்சராக இருந்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ள ரணில் விக்கிரமசிங்க!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்றைய தினம் கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது செய்யப்பட்டமை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கருத்து தொடர்பில் கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இரண்டு தடவைகள் கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை...

புனித பாப்பரசர் பிரான்சிஸ் மறைவுக்கு ரணில் இரங்கல்..!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கையில் உள்ள வத்திக்கான் தூதரகத்திற்குச் சென்று, புனித பாப்பரசர் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். தூதரகத்திற்கு சென்ற முன்னாள் ஜனாதிபதியை, இலங்கைக்கான வத்திக்கான் அப்போஸ்தலிக்க தூதுவர் பேராயர் பிரையன் என். உதய்க்வேவை சந்தித்து தனது இரங்கலைத் தெரிவித்தார். பின்னர் முன்னாள் ஜனாதிபதி இரங்கல் புத்தகத்தில் குறிப்பை எமுதினார்.

சட்டத்தரணி நாடு திரும்பியதன் பின்னரே இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாவேன் – ரணில்!

வெளிநாடு சென்றுள்ள தமது சட்டத்தரணி நாடு திரும்பியதன் பின்னர், கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாவதாக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவின் கைது தொடர்பாக வெளியிட்ட கருத்து ஒன்றுக்காக வாக்குமூலம் பெறும் நோக்கில் ரணில் விக்ரமசிங்கவை கடந்த 17ஆம் திகதி கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு...

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் ரணிலுக்கு அழைப்பாணை..!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏப்ரல் 25 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் முன் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ள சிறப்பு அறிக்கை!

ஏப்ரல் 17 ஆம் திகதி இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதை அடுத்து, அவர் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறை காலத்தில், தானும் தனது சட்டக் குழுவினரும் கொழும்பில் இல்லாதபோது, ​​இந்த அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டார். தனது அறிக்கையில், இலஞ்ச...

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்க!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார். ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சாமர சம்பத் தசனவக்கவுக்கு எதிரான புகார் தொடர்பான விசாரணைகளுக்காக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக இது நடந்தது. ஏப்ரல் 17 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு...
- Advertisement -spot_img

Latest News

லாவோஸில் 10 நாட்களாக குகைக்குள் சிக்கியோர் மீட்பு

மத்திய லாவோஸின் சாய்ஸோம்பன் மாகாணத்தில் உள்ள ஒரு குகையில் சுமார் 10 நாட்களாக சிக்கியிருந்த நான்கு பேரை, லாவோஸ் மற்றும் தாய்லாந்து மீட்புக் குழுக்கள் மீட்டுள்ளன. தங்கம்...
- Advertisement -spot_img