Monday, June 8, 2026
No menu items!

அம்பலாந்தோட்டை

அம்பலாந்தோட்டை பகுதியில் துப்பாக்கிச் சூடு!

அம்பலாந்தோட்டை – கொக்கல்ல பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக  காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த பகுதியில் வீடொன்றிலிருந்த நபரொருவர் மீது, உந்துருளியொன்றில் பிரவேசித்த இருவர் இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்த நபர் சிகிச்சைகளுக்காக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொக்கல்ல பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார். குறித்த நபருக்கும் மற்றுமொரு தரப்பினருக்கு இடையில் நிலவிவந்த தனிப்பட்ட முரண்பாடு காரணமாக இந்த துப்பாக்கிச்...

இரு குழுக்களுக்கிடையே மோதல்;3 பேர் வெட்டிகொலை!

அம்பலாந்தோட்டை, மாமடல பகுதியில் நேற்று (2) இரவு இடம்பெற்ற மோதலில் மூன்று பேர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 6 பேர் கொண்ட குழு வீடொன்றிற்கு நுழைந்து அங்கிருந்த மூன்று பேரை வெட்டிக் கொன்றதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று (02) இரவு 07.30 மணியளவில் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்தவர்கள் 29, 34 மற்றும் 45...

அம்பலாந்தோட்டையில் துப்பாக்கிச் சூடு சம்பவம்!

அம்பலாந்தோட்டை கடவர பகுதியில் நேற்று இரவு துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்தனர். மோட்டார் வாகனத்தில் பயணித்த நபர் ஒருவரை இனந்தெரியாத துப்பாக்கிதாரி துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கிச்சூடு நடந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

பண்ணையினால் பரவும் நோய்..!

அம்பலாந்தோட்டை ரிதியகம பண்ணையில் உள்ள விலங்குகளிடமிருந்து பரவும் Brucellosis நோயினால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. மாடு, ஆடு, பன்றி போன்ற விலங்குகளால் மனிதர்களுக்கு இந்நோய் பரவுகிறது, மேலும் விலங்குகளுடன் நெருக்கமாக வேலை செய்பவர்களுக்கு இந்நோய் தாக்கும் அபாயம் அதிகம். இந்நோயினால் பாதிக்கப்பட்ட பத்து பேர் அம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காய்ச்சல், தலைவலி,...

யானை தாக்கி மூன்று பிள்ளைகளின் தந்தை பலி..!

அம்பலாந்தோட்டை, மதயமலலந்த, கொக்கல்ல பிரதேசத்தில் இன்று (09.09) யானை தாக்கியதில் ஆணொருவர் உயிரிழந்துள்ளதாக அம்பலாந்தோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர். மதயமலலந்த பகுதியில் வசித்த மூன்று பிள்ளைகளின் தந்தையான உபுல் பிரியந்த என்ற 48 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு யானைகள் கிராமத்திற்குள் புகுந்ததால், காலையில் காட்டு யானைகளை விரட்டுவதற்காக கிராம மக்களுடன் அந்த இடத்திற்கு சென்ற போதே...

புதிய கூட்டணியின் முதலாவது பொதுக்கூட்டம் நாளை..!

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணியின் முதலாவது பொதுக்கூட்டம் நாளை(08.06) அம்பலாந்தோட்டையில் இடம்பெறவுள்ளது. ‘நாட்டிற்கு வெற்றி – எதிர்காலத்திற்காக ஒன்றிணைவோம்’ என்ற தொனிப்பொருளில் இந்த பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது அதன்படி பிற்பகல் 2:00 மணிக்கு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ளும் வகையில் பொதுக்கூட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர,...
- Advertisement -spot_img

Latest News

கணவரை கத்தியால் தாக்கி கொலை செய்த மனைவி கைது!

ஹொரனை காவல் பிரிவின் அரம்பகந்த பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடர்ந்து, தனது கணவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக தெரிவித்து பெண் ஒருவர் கைது...
- Advertisement -spot_img