இலங்கைத் தமிழரசுக்கட்சி
இலங்கை அரசியல்
தமிழரசுக்கட்சியின் கொழும்புக்கிளை தெரிவிப்பு-சிங்கள, முஸ்லிம் சமூகத்தவர்களும் பெரும் நாட்டம்..!
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் கொழும்பில் போட்டியிடுவதற்கு தமிழ் உறவுகள் பலர் விருப்பத்தை வெளிப்படுத்தியிருப்பதாகவும், தாம் எதிர்பாராதவகையில் சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகத்தைச்சேர்ந்தவர்களும் அவர்களது நாட்டத்தை வெளிப்படுத்தியிருப்பதாகவும் அக்கட்சியின் கொழும்புக்கிளை தெரிவித்துள்ளது.
எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத்தேர்தலில் கொழும்புவாழ் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி, கொழும்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடமிருந்து இலங்கைத் தமிழரசுக்கட்சி விண்ணப்பங்களைக் கோரியிருந்தது. விண்ணப்பங்களை...
Top
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் ஆரம்பம்..!
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று காலை 10 மணியளவில் வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் ஆரம்பமாகியது.
தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெற்றுவரும் இந்தக் கூட்டத்தில் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்கள் சமர்ப்பிப்பு, வேட்பாளர்கள் தெரிவு மற்றும் தேர்தலைக் கையாளுதல் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கூட்டத்தில் பொதுச்செயலாளர்...
உள்நாட்டுச்செய்திகள்
இலங்கைத் தமிழரசுக்கட்சி தனித்தே போட்டியிடும் – எம்.ஏ.சுமந்திரன்..!
இலங்கைத் தமிழரசுக்கட்சி உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் தனித்தே போட்டியிடுகின்றது. அதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக போட்டியிடும் பேச்சுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அக்கட்சியின்பதில் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கூட்டம் சனிக்கிழமை (08/03/2025) மாலை மட்டக்களப்பில் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சாணக்கியன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினரும்...
புதிய செய்திகள்
தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!
இலங்கைத் தமிழரசுக்கட்சியில் மட்டக்களப்பு, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 28பேருக்கு எதிராக இதுவரையில் ஒழுக்காற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினருமான வைத்தியர்.ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
அத்துடன் ஐந்து மாவட்டங்களின் பட்டியல்கள் இன்னமும் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டத்தின் தீர்மானத்துக்கு அமைவாக, கட்சியின் தீர்மானத்துக்கு எதிராகவும், கட்சிக்கு எதிராகவும் கடந்த ஜனாதிபதி, மற்றும் பாராளுமன்ற...
புதிய செய்திகள்
கனேடிய அமைச்சரை சந்தித்த தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள்..!
கனடாவின் முடிக்குரிய பூர்வீகக் குடிகள், வடக்கு விவகாரங்கள் மற்றும் வடக்கு பொருளாதார அபிவிருத்தி நிறுவனங்களுக்கான அலுவல்கள் அமைச்சர் ஹரி ஆனந்த சங்கரிக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் வெள்ளிக்கிழமை (10) மாலை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பு பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், பத்மநாதன்...
உள்நாட்டுச்செய்திகள்
தமிழரசுக்கட்சியினால் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் திருத்தம்..!
தமிழரசுக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் திருத்தமொன்றைச் செய்வதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் விஞ்ஞாபனம் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
வெளியீட்டு நிகழ்வுக்கு முன்னதாக குறித்த விஞ்ஞாபனத்தை மாவை.சோ.சேனாதிராஜாவிடத்தில் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
அதன் போது அங்கு பிரசன்னமாகியிருந்த சிவஞானம் சிறிதரன் விஞ்ஞாபனத்தின் ஐந்தாவது பிரிவில் காணப்படுகின்ற தவறைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனையடுத்து விஞ்ஞாபன வரைவில் பங்கேற்ற சுமந்திரன் உள்ளிட்டவர்கள் அதனை மீளத் திருத்துவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில்...
Latest News
பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு
பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது.
உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...


