Thursday, May 14, 2026
No menu items!

இலங்கைத் தமிழரசுக் கட்சி

தமிழர்களுக்கான அரசியல் தீர்வுதான் என்ன? இந்தியாவிடம் இ.த.க.கேட்டது என்ன?

தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆவணப்படுத்துவதற்கும், அதனை இந்திய உயர்ஸ்தானிகரிடம் கையளிப்பதற்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று கொழும்பில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போதே, குறித்த தீர்மானம் எட்டப்பட்டதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். அத்துடன்,...

தங்களுடைய ஆசனங்களை இழந்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்..!

இலங்கையின் பத்தாவது நாடாளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தங்களுடைய ஆசனங்களை இழந்துள்ளனர். இதன்படி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தோல்வியடைந்துள்ளார். தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கொழும்பு மாவட்டத்தில் தோல்வியடைந்துள்ளார். புளொட் கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தோல்வியடைந்துள்ளார். அத்துடன் கடந்த 2020...

இதுவரை வெளியான பெறுபேறுகளின் படி கட்சிகள் பெற்ற ஆசனங்கள்..!

2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரை வெளியான பெறுபேறுகளின்படி தேசிய மக்கள் சக்தி – 141 ஆசனங்கள் ஐக்கிய மக்கள் சக்தி – 35 ஆசனங்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சி - 7 ஆசனங்கள் புதிய ஜனநாயக முன்னணி – 3 ஆசனங்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 2 ஆசனங்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 2 ஆசனங்கள் ஜனநாயக தமிழ்...

இதுவரை வெளியான பெறுபேறுகளின் படி தேர்தல் முடிவுகள்!

2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரை வெளியான பெறுபேறுகளின்படி தேசிய மக்கள் சக்தி - 106 ஆசனங்கள் ஐக்கிய மக்கள் சக்தி - 28 ஆசனங்கள் புதிய ஜனநாயக முன்னணி - 3 ஆசனங்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 2 ஆசனங்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சி - 3 ஆசனங்கள் ஐக்கிய தேசியக் கட்சி - 1 ஆசனம் ஜனநாயக தமிழ்...

தமிழ் மக்களின் நிரந்தர அரசியல் தீர்வே தமது பிரதான நோக்கம்;இராசமாணிக்கம் சாணக்கியன்!

தமிழ் மக்களின் நிரந்தர அரசியல் தீர்வே தமது பிரதான நோக்கமென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எங்கள் கட்சியின் பிரதான இலக்கு தமிழ் மக்களின் நிரந்தர அரசியல் தீர்வு. நிரந்தர அரசியல் உரிமை இல்லாத நாட்டில் எங்களுக்குக் கிடைக்கும் எந்தவொரு...

தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளர் அறிமுக நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நேற்று(13.10) மாலை நடைபெற்றது. தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவரும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சீ.வீ.கே. சிவஞானம் தலைமையில்  யாழிலுள்ள தந்தை செல்வா மண்டபத்தில் நடைபெற்றது. இதன் போது வேட்பாளர்கள் அழைத்து வரப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் வேட்பாளர் அறிமுக நிகழ்வு...

சஜித் பிரேமதாசவை ஆதரிக்கின்ற முடிவில் எந்த மாற்றங்களும் இல்லை; சுமந்திரன்!

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கின்ற முடிவில் எந்த மாற்றங்களும் இல்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சி மீண்டும் அறிவித்துள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரதானிகள் குழு ஒன்று அண்மையில் கூடி இந்த முடிவு உறுதி செய்ததாக அதன் பேச்சாளர் எம். ஏ. சுமந்திரன் தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். சஜித் பிரேமதாசவைத் தவிர ஏனைய எந்த...

பொறுப்புள்ளதாக தெரிவித்த மாவை சேனாதிராஜா..!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பொறுப்பு தமக்கு உள்ளதாகக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று (02.09) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, கட்சி எடுத்துள்ள குறித்த தீர்மானத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பில்...

சஜித்திற்கு ஆதரவளிக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சி…!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று வவுனியாவில் நடைபெற்றது. இதன்போது இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சுயேட்சையாக களமிறக்கப்பட்ட தமிழ் பொது வேட்பாளர்..!

தமிழ் பொது வேட்பாளர் சுயேட்சையாகவே களமிறக்கப்பட்டுள்ளதாக  பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் பொது வேட்பாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் பா. அரியநேந்திரன், அறிவிக்கப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், எமது பொது வேட்பாளர் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர்...
- Advertisement -spot_img

Latest News

கபில சந்திரசேன உயிரிழப்பு; சிசிடிவி, ஏனைய ஆதாரங்கள் நீதிமன்றில் சமர்ப்பிப்பு!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி கபில சந்திரசேன உயிரிழந்ததாக கூறப்படும் இல்லத்தில் உள்ள சிசிடிவி கெமராக்கள் இயங்கிய பொழுதும் அவை நீண்ட...
- Advertisement -spot_img