எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பொறுப்பு தமக்கு உள்ளதாகக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று (02.09) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, கட்சி எடுத்துள்ள குறித்த தீர்மானத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பில் எதிர்வரும் கூட்டங்களில் ஆராயப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று (01.09) இடம்பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளரான சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here