Tuesday, November 10, 2026
No menu items!

இழுவை

தலைமன்னாரில் வைத்து 10 இந்திய மீனவர்கள் கைது!

தலைமன்னாருக்கு தெற்காகவுள்ள கடற்பகுதியில் இன்று அதிகாலை சட்டவிரோதமாகக் கடற்றொழில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 10 இந்திய மீனவர்களைக் கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். இதன்போது, இழுவை படகொன்றும் கைப்பற்றப்பட்டதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார். கைதான மீனவர்களைக் கரைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் மண்டபத்தைச் சேர்ந்த 10 மீனவர்களே இவ்வாறு கைதாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
- Advertisement -spot_img

Latest News

சீரற்ற காலநிலை; ஹட்டன் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு 

மத்திய மலைநாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று பிற்பகல் முதல் பெய்துவரும் கடும் மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஹட்டன் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில்...
- Advertisement -spot_img