நாட்டின் சில பகுதிகளில் இன்று இரவு மற்றும் நாளைய தினத்தில் 100 மில்லி மீட்டருக்கும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (நவம்பர் 9) மாலை 4 மணிக்கு வெளியிட்ட 36 மணித்தியால பொது வானிலை முன்னறிவிப்பின்படி, இன்றிரவு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100மி.மீ க்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதேநேரம் நாளை, வடக்கு மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். அதேவேளை, நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1:00 மணிக்கு பின்னர் மழை பெய்யும்.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் தெரிவு செய்யப்பட்ட பகுதிகளிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100மி.மீ க்கு மேல் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளிலும், காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் அதிகாலையில் மூடுபனி காணப்பட வாய்ப்புள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் குறித்து பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.








